சனி, 15 ஜூன், 2019

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை
=============================================ருத்ரா

பாரதி புதுமைப்பெண்ணுக்கு
எழுதிய வரிகளை
கார் பந்தய வீரர் அஜித்துக்கு
எப்படி பொருத்தினார்கள்?
தல‌
"சால்ட் அன்ட் பெப்பர்" விக்கில்
திரையில் தோன்றினால் போதும்!
இந்த தலைமுறையினரின்
தலைகள் எல்லாம்
ஆனந்தம் தாளாமல் கிறுகிறுத்துப்போகும்.
இந்த சமுதாயத்தில்
எந்த மூலையில்
எவர் தலையில்
எப்படி இடி வீழ்ந்தால் என்ன?
இந்த தலைகளுக்குள் அது
நுழைவதே இல்லை.
வில்லன் மட்டுமே
பூதாகாரமாய்
நின்று
இவரிடம் அடி வாங்கி அடி வாங்கி
நொறுங்கிப்போவான்.
1952ல் முதன் முதல்
சிவாஜி கணேசன் திரையில்
முகம் காட்டிய போது
அது பகுத்தறிவு வெளிச்சம் காட்டியது.
எம்.ஜி.ஆரும்
சமுதாய மறுமலர்ச்சியை
பூக்க வைக்க நடிப்பைக்காட்டினார்.
இந்த தமிழ் மண் அவர்களை
உள்வாங்கியது.
இந்த சமுதாய பிரக்ஞை
ஏன் அஜித்திடம் இல்லை?
"ஆசை நாயகனாய்"
வலம் வந்தவர்
அப்படியே அதிரடிக்கதாநாயகன்
ஆகினார்.
அப்புறம்
கட் அவுட் பால்குடங்கள்
கலாச்சாரத்தில்
வானுயர நிமிர்ந்தார்.
அப்போதும் கூட‌
ஆஞ்சனேயா வடைமலை என்று
இவரும் கூட‌
ஆத்மீகம் என்று பெயர்சொல்லாத‌
ஆத்மீகத்தை தான் இவர் ரசிகர்களுக்கு
பொதிந்து கொடுத்தார்.
ஆனால்
வசூல் மழை இவர்காட்டில் தான்.
தமிழ் நாட்டு இளைஞர்கள்
இந்த சினிமாக்கள் மூலம்
திசைகளை இழந்து போனது தான்
மிச்சம்.
அய்ய..தமிய் தமிய்ன்னு
எப்போதும் பேஜாராப்போச்சு.
ஜம்முன்னு ரெண்டு குத்தாட்டம்
செமையா நாலு ஃபைட்டு
அத்தோடு வுடுவியா?ன்னு

இந்த இளம்புயல்கள்
பேசிக்கொண்ட போதும்
அடியில் ஒரு புயல் வீச‌
அதுவும்
எந்த "பெயர் சூட்டலுக்கும்"
அடங்காத ஒரு புயலை
கைவசம் வைத்துக்கொண்டு தான்
இருக்கின்றன.

அந்த நம்பிக்கையே
இப்போது இந்த‌
நேர் கொண்ட பார்வை!

======================================================



2 கருத்துகள்:

ஜானகிராமன் சொன்னது…

என்ன சொல்ல வருகுறீர்கள் ஒன்றும் புரியவில்லை . இன்றைய நிகழ்வுகளை தலைப்பிட்டால் நமது பக்கங்கல்லுக்கும்ம் நாலு வாசகர்கள் கிடைப்பார்கள் என்று நினைப்போ

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

அன்பு நண்பரே

இன்றைய நிகழ்வுகள் அப்படித்தானே உள்ளன.
இவற்றை தள்ளவும் முடியவில்லை.கொள்ளவும் முடியவில்லை.
இன்றைய இளைய தலைமுறைகள் தான் இந்த நிகழ்வுகளை
வரலாற்று நிகழ்வுகள் ஆக்க வேண்டும்.

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக