திங்கள், 10 ஜூன், 2019

கிரேசி மோகன் அவர்களுக்கு ஒரு அஞ்சலி

கிரேசி மோகன் அவர்களுக்கு ஒரு அஞ்சலி
======================================================ருத்ரா

அஞ்சலியா
ஏஞ்சலியா
யார்யா அவள்?
என்று கேட்பார் கிரேசி மோகன்
அந்த
கண்ணாடிக்கூட்டிலிருந்து
எழுந்து உட்கார்ந்து கொண்டு.

வார்த்தைகள் அருவியாய்
சிரித்துக்க வைத்துக்கொண்டே
கொட்டும்.
இத்தனை பிரம்மாண்டமான‌
படங்களுக்கெல்லாமா
இவர் வசன கர்த்தா?
என்று
நம்மை வியக்க வைத்தார்
கிரேசி.
படங்களில் வேக வேகமாக‌
கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டே
இருப்பவர் மட்டும் தான் என்று
நினைத்தால்
நாம் ஏமாந்து தான் போவோம்.
படம் ஓடுவதே தெரியாமல்
நம் விலாக்களுக்கெல்லாம்
சிரிக்க சிரிக்க வைத்து
சுளுக்கு எடுத்து விடுவார்.
உலக நாயகன் பண்ணிய
காமெடிகளில் எல்லாம்
உள்ளே இருந்து வெடிக்கும்
கண்ணி வெடிகளை
தன் வசனத்தில் புதைத்திருப்பது
இவரே தான்.

மைக்கேல் மதன காமராஜன்
தெனாலி
பஞ்சபூதம்
அபூர்வசகோதர்கள்
........
.........
இன்னும்
அந்த காமெடிக்கடலின்
திவலைகளுக்கு
எப்படி பட்டியல் இடுவது?

துக்ளக் காமெடியில்
அரசியல் இருக்கும்.
கிரேசியின் காமெடியில்
காமெடி மட்டுமே இருக்கும்.

இவர் வேகம் சுநாமியின் வேகம்.
அதனால்
வடிவேலுவின் காமெடிபோல்
அசைபோட்டு அதனுள்
பல கேரக்டர்களை
கொத்து கொத்தாய்
கொத்துக்கறி போடும்
மீம்கள் இவரிடம் சாத்தியம் இல்லை.

பாலச்சந்தர் படங்கள்
ஏ ஏரியாவுக்குள் வட்டமிடும்.
அவரின் நாடக பாணியிலிருந்து
கிளைத்த இவரது காமெடிகள்
அப்படி ஏ ஏரியாவுக்குள்
புகுந்த போதிலும்
பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும்
சூபர்ஸ்டார் படங்களிலும்
இவர் தன் நகைச்சுவையின்
ஆயிரம் வாலாக்களை
வெடிப்பதற்கு
அள்ளித்தந்து கலகலக்க‌
வைத்து விடுவார்.
நகைச்சுவைக்கு சோகம் ஏது?
நாளைக்கு
தகனம் என்று சொல்கிறார்கள்.
அப்படியா? அதற்கென்ன?
"கால் ஷீட்டுக்கு" நான் ரெடி என்பார்.
நம் கண்ணீரை அடக்கமுடியவில்லை.
சிரித்துக்கொண்டே
அந்த சிரிப்பு எனும் கர்ச்சீப்புக்குள்
அதை நனைத்துக்கொண்டு விடுவோம்.

=============================================================
இரவு.11.25/ 10.06.2019




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக