செவ்வாய், 18 ஜூன், 2019

தமிழ் வாழ்க‌

தமிழ் வாழ்க‌
==============================================ருத்ரா

தமிழ் வாழ்க என்று
ஒலித்ததும்
வீம்புக்காக அடிவயிற்றைப்
பிடித்துக்கொண்டு
பாரத் மாதா கி ஜெய்யும் ஒலித்தது.
எங்கள் அன்பான‌
இந்திய உடன் பிறப்புகளே
இப்படி அடிவயிற்றை
பிசைந்து கொண்டு ஒலிப்பதை விட‌
இந்திய மண்ணின்
அடிவயிற்றைத்தொட்டுப்பாருங்கள்.
ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பு
அங்கு புதைந்திருந்த
சிந்து வெளி நகர் முறையை
அந்த முத்திரை எழுத்துக்களின்
ஒலி பெயர்த்த மொழியினை
அறிவின் சிந்தனை ஒற்றிய‌
உள்ளத்தோடு பொருத்திப்பாருங்கள்.
அதை உற்றுக்கேளுங்கள்
தமிழ் வாழ்க என்பதன்
முதல் ஒலியும் அதில்
இழைந்திருக்கும்.
தமிழ்நாடு என்பதே இந்தியா
எனும் சிந்தியா
என்பதும் புரிந்திருக்குமே!
சிந்து எனும் தமிழ்ச்சொல்
நீர்ப்பெருக்கத்தை குறிக்கும்.
நீரோட்டம் போன்று
ஒரு செய்யுள் நடை நம்மிடம்
உண்டு.
அது சிந்தியல் வெண்பா.
உயர் மொழியாய் போற்றப்படும்
சமஸ்கிருதம் கூட‌
தமிழர்கள்
நமக்கு நாமே என்று
உருவாக்கிய மொழி தான்.
பாருங்கள் வெறும் பங்காளிக்காய்ச்சல்
"பாரதப்பெரும்போரையே"
நடத்திவிட்டுப்போயிருக்கிறது.
அது போல்
ஒரு வரலாற்றுக்காய்ச்சல்
தமிழன் உருவாக்கிய சமஸ்கிருதத்தை
தமிழுக்கே எதிரியாக்கி
அல்லது
அந்த சமஸ்கிருதத்தைக்கொண்டே
தமிழை விழுங்கியே தீருவது
என்ற‌
அதே பங்காளிக்காய்ச்சலின்
பாரதப்பெரும்போர் நடத்திக் கொண்டிருக்கிறது.
கடல் என்பது தமிழில்
பரவை ஆகும்.
அந்த பரவையின் பரதவனே
நம் வியாசன்.
தமிழ்
சமஸ்கிருதத்தை
என் மொழி என்று
உரிமை கொண்டாடுகிறது.
அதன் எழுத்து வடிவமான‌
"தேவ நாகரி" என்பதே தூய தமிழ்ச்சொல்.
நகர் எனும் வினையாகுபெயர் நகர் ஆனது.
நகரவியல் இங்கு நாகரி ஆனது.
தீ என்பதை முதலில் கண்ட அந்த தமிழன்
"தீவன்" ஆனான்.
பிறகு உயர்வு நவிற்சியாய் தேவன் ஆனான்.
தன் நாவினால் வல்லவன் ஆகி
நாவலன் ஆனான்.
அந்த நாவலன் தீவன்கள் உறையும் இடம்
நாவலன் தீவம் ஆகி நாவல‌ந்தீவு ஆகிற்று.
தமிழன் வாழும் இடம் நாவலந்தீவு ஆயிற்று.
தமிழன் வாழ்ந்த இடத்து மரங்கள்
நாவல மரங்கள் ஆகி நாவல் மரங்கள்
ஆகியிருக்கலாம்.
நீ உமியைக்கொண்டுவா
நான் அரிசியைக்கொண்டு வருகிறேன்
ஊதி ஊதித்திங்கலாம் என்ற கதை தான்.
இடையில்
நான்கு வர்ணம் ஐந்து வர்ணம் என்று
வியூகம் வகுத்து
வெறி வளர்த்து
போர் வளர்த்து
கண்ணுக்குத்தெரியாமல் அழல் வளர்க்கும்
இந்த பாரதப்போர் நிறுத்தப்படவேண்டும்.
அரிசிக்கும் உமிக்கும் அடிப்படை
நெல் எனும் தமிழே.

ஆகவே
தமிழ் வாழ்க‌
தமிழ் வாழ்க‌
தமிழ் வாழ்கவே!

========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக