திங்கள், 17 ஜூன், 2019

ஜெயமோகனும் புளிச்ச மாவும்.

ஜெயமோகனும் புளிச்ச மாவும்.
==================================================ருத்ரா

புளிச்சமாவு ஒரு அலிபி.
அந்த திமுக கடைக்காரருடன்
கொஞ்சம் உரசினால்
டெல்லி வரைக்கும்
அதிர்வு எண் ரிக்டேர் ஸ்கேல்
கொஞ்சம் எகிறினால் சரி.

தோசை மாவு
புளித்தாலும் பிரச்னை.
புளிக்காவிட்டாலும் பிரச்னை.
இவர் புளிச்ச பிரச்னையையே
கையில் எடுத்துக்கொண்டார்.
வியாசர் எழுதித்தள்ளி
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்
புளித்த இதிகாசத்தையே
ஆண்டுக்கணக்கில்
நாவல் எழுதும் அசகாய சூரர்
அல்லவா இவர்!

எனக்கு ஒரு ஆச்சரியும்.
தலையணை தலையணயாய்
எழுதித்தள்ள வேண்டிய "ப்ராஜெக்ட்"
கையில் இருக்கும்போது
எதற்கு இந்த தள்ளு முள்ளு?
பொன்னான நேரம் இவருக்கு
இப்படி விரயம் ஆகலாமா?
எப்படி இருந்தாலும்
அந்தக் கடைக்கார்
இவர் எழுத்துக்களுக்கு
மரியாதை செய்திருக்கவேண்டும்.
இவர் நாகம் என்றும் கருடன் என்றும்
எத்தனை வியூகங்கள் அமைத்துக்கொண்டு
குருட்சேத்திரப்போருக்கு
கங்கணம் கட்டிக்கொண்டு வந்தாலும்
அந்த சண்டை சச்சரவை
வெறும் பொம்மை சண்டையாக‌
மாற்றியிருக்கலாம் அந்த கடைக்காரர்.
இவர் ஆஸ்பத்திரியில்
எல்லாம் போய் படுத்துக்கொண்டு
சாணக்கியங்கள் செய்ததைப்பார்த்தால்
வரப்போகும் சட்டசபைத் தேர்தலையும்
மோடிஜி அவர்கள் பாணியில்
கழுவி ஊற்ற திட்டம் இருக்குமோ
தெரியவில்லை!

எது எப்படி இருந்த போதும்
அவர் எழுதும் தமிழுக்காகவாது
கடைக்காரர்
இறங்கிப்போயிருக்கவேண்டும்.
முரசுக்கட்டிலில் கொஞ்சம் அயர்ந்து
படுத்து விட்டார் என்பதற்கு
"அந்த மோசிகீரனார்" என்ற‌
தமிழ்ப்புலவர்க்கு தண்டனை தராது
அவர் களைப்பு தீர கவரி
வீசியவன் அல்லவா
அந்த தமிழ் மன்னன்.
தமிழின் தண்மையை
நாம் மறக்கவே கூடாது தான்.
கடைக்காரர் முணு முணுப்பது
நமக்கு கேட்கிறது.
இவர் ஒன்றும்
தமிழை உயிராய் மதிக்கும்
மோசி கீரனார் இல்லை.
தமிழை தன் அறிவால் கூர் தீட்டி
அந்தக்கத்தியைக்கொண்டே
தமிழைக் கூறு போடத் தயங்காதவர்.
திராவிட வரலாற்றையே
சனாதன ஆதிக்கக்காரர்களுக்கு
பலி கொடுக்க எண்ணிக்கொண்டிருப்பவர்.

புளிச்சமாவுகூட இந்த நாட்டில்
புனிதம்தானே.
அப்படியிருக்க
எதற்கு ஏன் இந்த வீண் சண்டகள்?
ஊடக மொழியில்
இதற்கும் கூட இங்கே
ஹிட் ரேட் அதிகம் அல்லவா!

================================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக