செவ்வாய், 18 ஜூன், 2019

தயிர்வடை தேசிகனும் யோகி பாபுவும்

தயிர்வடை தேசிகனும் யோகி பாபுவும்
=====================================================ருத்ரா

தலைப்பில் இருப்பவர்கள்
நகைச்சுவை நடிகர்கள்.
உருவ வித்தியாசமே
மேலே உள்ள நடிகர்களின்
நகைச்சுவை ரசிக்கப்படுவதற்கு
காரணம்.
தயிர்வடை தேசிகன்
வாயைத்திறந்தால் பற்களே
இருக்காது.
சொத்தை மிச்சங்களே இருக்கும்.
மேலும்
குச்சி உடம்பை சுற்றி
முணு நாலு சட்டை பேண்டுகளை
சுற்றி வைத்து உருவம் காட்டியிருப்பார்கள்.
இதையெல்லாம்
பார்த்தாலே போதும்
நமக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வரும்.
அதுவும் "அன்னையின் ஆணையில்"
சிவாஜி கணேசன்
இவரை வைத்துக்கொண்டு
லூட்டி அடிப்பதே பெரும் நகைச்சுவை தான்.

இப்போது
பம்பைத்தலையும்
சாயையில் கொஞ்சம் செந்திலும்
உள்ள யோகிபாபு
சந்தானம் போல் டைமிங் வசனம் பேசுவது
பெரும் காமெடியாய் ரசிக்கப்படுகிறது.
பேசும் வசனம் கூட
அவர் வாயாலா ?
இல்லை அந்த ஆப்பிரிக்கக்காட்டு
அடர்ந்த தலை அலங்காரத்தினாலா?
என்று தெரியவில்லை.
ஆனாலும் சிரிப்பு அலைகள்
தியேட்டரை திணற அடித்துவிடுகின்றன.
அதுவும் கோலமாவு கோகிலாவில்
நயன்தாராவை
ஒருதலையாக காதலிக்கும்
அந்த காக்காப்பார்வையும் சிரிப்பும் பேச்சும்
பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனாலும் நகைச்சுவை நடிகர்களின்
இலக்கணத்துக்குள்
முழுமையாக பொருந்தி வரவில்லை.
ஆனால் நகைச்சுவையையும் தாண்டி
சினிமாக்களின் கதை நகர்த்தலுக்கு
அவர் பெரிதும் விறு விறுப்பு காட்டியிருக்கிறார்.
சந்திரபாபு
ஒரு காலகட்டத்தின் புள்ளியில்
தன்னை கோமாளித்தனம் செய்யும்
பாத்திரமாக கருதாமல்
ஒரு சிறந்த பாத்திரப்படைப்பில்
புகுத்திக்கொண்டு
படம் எடுத்தார்.
அது தான் "தட்டுங்கள் திறக்கப்படும்"
படம் சிறப்பாக அமைந்தது
வணிக முறையில் முந்திவரவில்லை.
நகைச்சுவை நடிகர்களுக்கே உள்ள காம்ப்ளெக்ஸ் அது.
அதில் எப்போதும்
முன் நின்று வென்றவர் நாகேஷ்.
அவருடைய "சர்வர் சுந்தரம்"
"நீர்க்குமிழி" "எதிர்நீச்சல் "
போன்றவை அற்புதமான சாதனைகள்.
கவுண்டமணி ..செந்தில்
வடிவேலு
விவேக்
பட்டியல் முடியவில்லை தான்.
இவர்களின் நகைச்சுவைப்  பேராறு
திரைப்படைப்பின் இலக்கியத்தை
ஆழமாகவும் கூர்மையாகவும்
ஆக்கியிருக்கிறது.
இவர்களின் தடங்களும் இடங்களும்
வேறு வேறானவை...அவை
மீம்களுக்கு சோறு
போட்டுக்கொண்டிருக்கின்றன .

இந்த ஓடுகளத்தில்
"கூர்க்கா"வாக  வெல்ல வருகிறார்.
யோகி பாபு.
பாத்திரம் தான் கூர்க்கா.
நடிப்பின் நிமிர்வில்
நிச்சயம் அவர் ஒரு ராஜ ராஜனாக‌
சிறந்து நிற்பார் என நம்புகிறோம்.
அவருக்கு
நம் மனங்கனிந்த வாழ்த்துக்கள்!

=================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக