ஞாயிறு, 30 ஜூன், 2019

இ.எம்.ஜோசஃப் எனும் இனிப்பான எரிமலையே.





இ.எம்.ஜோசஃப் எனும் இனிப்பான எரிமலையே.
=======================================================ருத்ரா.

அன்பான தோழரே!
எப்படி உங்கள் இதயத்தை
உங்களுக்கு எதிராக துடிக்கவைத்தீர்?
உங்கள் சொற்பொழிவுகளில்
இதயம் இல்லாத இரும்புகள் கூட‌
மனித நேயம் பற்றி சிந்தித்து
உருகத்தொடங்கிவிடுமே!
எப்படி நிகழ்ந்தது இது?
ஏன் நிகழ்ந்தது இது?
என்று நாங்கள் மனம் துடித்து
கேள்விகள் நீட்டினாலும்
சிரித்துக்கொண்டே விடையளிப்பவர்
அல்லவா நீங்கள்?
மார்க்ஸின் டயலக்டிகல் மெடீரியலிஸம்
எப்படி வேண்டுமானாலும் நிகழும்
என்பீர்களே.
பிறப்பு இறப்பு என்ற
முரண்பாடுகளின் விளைவுதானே இது
என்பீர்கள்.
ஆம்
பிறப்பு இறப்பு எனும் சமன்பாடுகளை
உடைத்து விட்டீர்கள்.
உங்கள் தொண்டும் உழைப்பும்
உழைக்கும் வர்க்கத்தின்
வேர்வைத்துளிகளில்...
அதிலிருந்து பிறக்கப்போகும்
ஒரு யுக சந்திப்பில்...
சுடர்ந்து கொண்டே இருக்கிறது.
கண்ணீரைக்கொண்டு
அந்த எரிமலையை
எப்படி அவித்துக்கொள்ள முடியும்?
புன்முறுவலுடன்
இனிக்கும் எரிமலையை
எப்போதும் எங்கள் முன்
நிழலாட விட்டு
வெறுமே ஓய்வு எடுக்கவா
நீங்கள் மறைந்திருக்கிறீர்கள்?
இல்லை..
உங்கள் பேச்சுகள் எல்லாம்
மூளி வானத்தில்
விடியல்களை செதுக்க வைக்கும்
வல்லமை பெற்றதல்லவா!
விடியல்களின்
விளிம்பு விழுதுகளை
எங்களோடு விட்டுச்சென்றிருக்கிறீர்கள்.
விடியட்டும்.
நாங்களும் உங்களோடு விழிப்போமாக!

========================================================



வெள்ளி, 28 ஜூன், 2019

ஆகாசப்பந்தலிலே...


ஆகாசப்பந்தலிலே...
========================================ருத்ரா


...பொன்னூஞ்சல் ஆடுதம்மா!

சபாநாயகர் மீது
நம்பிக்கை இல்லா தீர்மானம்.

எதிர்க்கட்சிகள்
துருப்புச்சீட்டை இறக்கவேண்டும்.
ஏனோ தெரியவில்லை.
மாயக்கைகளின் மாயவிரல்களில்
சூத்திரக்கயிறு மூலம்
ஆடும் பொம்மலாட்டம் இது.
சட்டப்படி நியாயப்படி
நடப்பதாக எத்தனைபோக்கு காட்டினார்கள்?
சிறு பிள்ளைகளுக்கும் தெரியும்
அங்கு இருப்பது
சிறுபான்மை தான் என்று.
ஜனநாயகத்தின் எந்திரங்கள் எல்லாம்
செயலிழந்த வேளையில்
சகுனிகளின்
பகடை உருட்டலில் மட்டுமே
அரங்கேறும் பாரதம் இது.
சும்மா
தர்ம யுத்தம் தர்ம யுத்தம் என்ற‌
பாஞ்ச ஜன்ய முழக்கங்களால்
நம் சண்ணுக்குத் தெரியாத‌
அந்த அதர்மத் திரைகள்
அகன்று விடும் என்ற
நம் நம்பிக்கை எனும்
பொய்க்கால் குதிரை
ஆட்டங்களைக் கண்டு
விசில் அடித்துக்கொண்டு
இருப்பதை தவிர‌
வேறு வழி ஒன்றும்
இருப்பதாய் தெரியவில்லை.
கூட்டணிக்கயிறு கொண்டு இந்த‌
நெல்லிக்காய் மூட்டையை
எத்தனை நாள் அடைகாப்பது?

நெஞ்சு பொறுக்குதில்லையே..
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதர்களை
நினைந்து விட்டால்...

======================================================




வியாழன், 27 ஜூன், 2019

பூகோள புத்தகம்


பூகோள புத்தகம் 
=====================================ருத்ரா



உலகத்தின் முக்கால் பங்கு
தண்ணீர் என்று
பூகோள புத்தகம் சொன்னது.
கடைசியில் இருந்தது
பிழை திருத்தம்.
அது தண்ணிர் அல்ல
 "கண்ணீர்" என்று.

======================================


புதன், 26 ஜூன், 2019

"ஊமைப்படம்"

Friday, May 23, 2014

"ஊமைப்படம்"





"ஊமைப்படம்" 
===============================ருத்ரா இ.பரமசிவன் 

அவள் இரைந்து கத்தினாள். 
பற்கள் கடித்தாள். 
மார்பில் கைகளை அடித்துக்கொண்டாள். 
ஆக்ரோஷம் ஆக்ரோஷம். 
டிஃபன் தட்டை ணங்கென்று 
வைத்த போதும் 
காஃபிக்கு நுரை மகுடம் சூட்டி 
சூடாகவே தந்தபோதும் 
அவள் உடம்பு நடு நடுங்க 
குரல் எழுப்பினாள். 
கண் விழிகள் 
கரும் கடுவாயின் 
வெள்ளை விழிகளையும் 
துப்பாக்கி குண்டுகளைப்போல‌ 
க‌ருங்க‌ன‌ல் துண்டுக‌ளையும் 
ப‌ட‌ம் காட்டின‌. 
புள்ளி போட்ட‌ மார்பிள் ஷிஃபான் கூண்டுக்குள் 
இருந்துகொண்டு 
கொசுவ‌த்தை சொடக்கு போட்டு 
பேசிக்கொண்டே போனாள். 

நான் "ம்யூட்டிங்கில்" 
இருந்தேன். 
"முப்பது"க‌ளின் ஒரு ஊமைப்பட‌ம் 
ஓடிக்கொண்டிருந்தாலும் 
அவ‌ள் முக‌ ந‌ர‌ம்புக‌ள் 
எரிம‌லையின் வ‌யிற்றைத் 
திருகி திருகி ஃபிடில் 
வாசித்த‌து. 
வ‌ந்த‌தும் வ‌ராத‌துமாய் 
அவ‌ள் மீது 
என்ன‌ சொல்லை வீசியிருப்பேன்? 
இந்த‌ எதிர்வினைக‌ளின் க‌ன‌ல்ப‌ரிமாண‌த்தை 
வைத்து 
நியூட்ட‌னை த‌லைகீழாக‌ நிறுத்தி வைத்துக்கொண்டு 
கேட்டேன். 
அந்த நேரான‌ சொல் தான் என்ன‌?. 
சொன்னவன் எனக்குத் தெரியாதா? 
இருந்தாலும் கேட்டேன். 
முக‌ம் க‌ழுவிக்கொண்டு 
அமைதியாக‌ நான் அறைக்குள் போய்விட்டேன். 

அவ‌ள் 
இன்னும் அம்புப்ப‌டுக்கை த‌யார்செய்து 
அதில் 
ர‌த்த‌மாக‌த்தான் ச‌த்த‌ம்போட்டாள். 
நான் என்ன‌ அப்ப‌டி கேட்டுவிட்டேன். 
மீண்டும் அமைதியாய் 
முக‌ம் துடைத்துக்கொள்ள‌ 
க‌ண்ணாடி பார்த்தேன். 
ட‌ப்பென்று க‌ண்ணாடி சித‌ற‌த‌ல்க‌ள். 
கீழே விழுந்த‌ சில்லுக‌ள் எல்லாம் 
துண்டு துண்டாக‌ தெரிந்த‌து. 
குரூர‌க்கோரைப்ப‌ல் தெரிந்த‌து. 
ர‌த்த‌ம் சொட்டிய‌ ச‌வுக்கு 
என் க‌ழுத்தில் வ‌ல்லாட்டுபோல் 
தெரிந்த‌து. 
நாகரிகத்தில் 
முடி சூட்டிக்கொண்ட‌ 
என் அகலமான‌ 
ஸ்மார்ட் ஃபோன் 
கீழே விழுந்து கிட‌ந்த‌து. 
அத‌ன் "அண்ட்ராய்டு"க்குள் 
வ‌ரை 
அந்த‌ அசிங்க‌த்தின் கோர‌ம் 
வ‌ர்ண‌மாய்த் தெரிந்த‌து. 


================================ருத்ரா இ.பரமசிவன்

13 ஜூன் 2013

ஒரு தமிழ்த்தாத்தா

ஒரு தமிழ்த்தாத்தா
=======================================================ருத்ரா


"தமிழா! தமிழா!

இக்குரல் உனக்கு கேட்கிறதா?

கல்லும் மண்ணும்

அந்த நெருப்புக்குழம்பிலிருந்து

உருவானபோது உயிர்த்த‌

அந்த உயிர்த்தொகுதியிலிருந்து தான்

உன் எட்டுத்தொகையும்

பத்துப்பாட்டும்

உயிர்த்ததென்று

ஒரு பழம்பெருமை பேசும்

நோயில் நாம் கிடக்கின்றோம்.

இது தமிழ் குமிழியிட்ட போதே

தோன்றிய "பேலியோ சின்ட்ரோம்"நோய்.

"நோய் நாடி நோய் முதல் நாடி

வாய்நாடி வாய்ப்பச் செயல்."

அந்த "நோய் முதல் நாடிய"போது

பல லட்சம் ஒளியாண்டு தூரத்தில்

உள்ள

ஏதோ "ஒரு நாவலந்தீவாய்"

ஒரு தலைகீழ் புவி ஈர்ப்பு விசை உள்ள‌

அந்த தொங்கு மண்டலத்தில்

ஆங்கிலப்படம் "அவதாரில்"

காண்பது போல் உள்ள‌

ஒரு மண்ணில் இருந்து

அந்த "தமிழ் ஏலியன்"

தன் ஒளி எனும்

தன் அறிவு எனும்

தன் உயிர் எனும்

மகரந்தங்களை இந்த‌

தமிழ் நாட்டில் தூவியிருக்குமோ

என்று தோன்றுகிறது."


என்னை முற்றிலுமாய் சோதித்த‌

மூளை நரம்பியல் நிபுணர்

என் உறவினர்களிடம் கூறுகிறார்.

மூளையில் உள்ள‌

பர்க்கிஞ்சே செல்களில்

"ப்ரேன் காஸ்மாலஜி"

எனும் ஆயிரக்கணக்கான‌

பரிமாணங்களை சுருட்டி மடக்கிய‌

(கர்ல்டு அப் டைமன்ஷன்கள்)

ஒரு நரம்பியல் வெளி

(நியூரல்  ஸ்பேஸ்) இருக்கிறது.

அதன் நியூரான் கதிர்வீச்சின் காரணமாய்த்தான்

இவர் இப்படியெல்லாம் கூறுகிறார்.

இவர் கூறுவது

விஞ்ஞான அடிப்படை.

தர்க்கவியல் எனும்

சிந்தனை ஆற்றுப்படையின்

கசிவுகள் தான்.

இருப்பினும் இவர் சங்கிலியால்

பிணைக்கப்பட தேவையில்லை.

"நோ..நோ..நான்

ஏதோ ஒலிக்குறிப்பில்

புரிய முடியாத வகையில்

(நான் டீ சைஃபரபிள்)

ஏதேதோ ஒலி தருகிறேன்.

எனக்குத்தெரிகிறது

அதில் ஒரு "மறை மாத்திரை" இருக்கிறது.

அதன் ஒலிப்பிசிறுகளில்

நேனோ அதிர்வுகள் உள்ளன.

அது காஸ்மிக் தமிழாலஜி

நான் ஏதேதோ ஒலிக்கின்றேன்."


அந்த டாக்டர் சொல்கிறார்.

இவரை தனியறையில்

ஆனால் மிகவும் சக்திவாய்ந்த‌

ஆர்டிஃபிசியல் இன்டெல்லிஜென்ஸ் மூலம்

இயங்கும் கணினிகளின் அறையில்

அடைத்து வையுங்கள்.

...............

..................

"முடியாது..முடியாது

நான் தமிழர்களின் ஒலிவெள்ளத்துள் தான்

இருப்பேன்"

.....

நான் வீறிட்டு அலறியது கண்ட‌

என் கொள்ளுப்பேரன்

தாத்தா படுத்திருங்கள்.

உங்களுக்கு ஒன்றுமில்லை

என்கிறான்.

============================================================

திங்கள், 24 ஜூன், 2019

வாழ்க்கை ஒரு தாகம்

வாழ்க்கை ஒரு தாகம்

வா ழ்க்கை ஒரு தாகம் 



வாழ்க்கை ஒரு தாகம் 
=======================================================
ருத்ரா இ பரமசிவன் 





கவலை... கண்ணீர் 
இவை உனக்கு உன்மீது வந்து 
எப்போது 
கையெழுத்து போட்டன? 
பிறந்த உடனேயே 
அழுது ஒலிபெருக்கியிருப்பாய் 
அது உன் வரவின் அடையாளம். 
கண்ணீரும் கசிந்திருக்கும் 
அது சின்னப்பூவின் பளிங்குத்துளி 
கண்ணீர் அல்ல. 
உன் விடலைப்பருவம் முதல் 
கவலையின் ரேகைகள் உன் மீது 
ஜியாமெட்ரி போடவில்லை. 
அன்று உன் பூச்சிமயிர்களில் 
ஒரு மெல்லிய பிக்காஸோ ஓவியத்தின் 
தூரிகை இழைகள் சுகமாய் வருடின. 
ஆம் 
அப்போது உன் முன்னே 
ஒரு பிஞ்சுப்பெண் நிழல் காட்டினாள். 
காதல் ஒரு பொய் மெய் இன்பமாய் 
அவள் புன்னகைக்கீற்றில் 
புல்லரிக்கிறது. 
அந்த நிழலைப்பிடித்து 
நிஜமாக்கும் வேட்டையில் தான் 
உனக்கு 
வாழ்க்கையின் கசிவு வலிகள் 
வருடிச்செல்கின்றன. 
வயது முறுக்கு அவிழ்ந்த போது 
வாழ்க்கையின் முறுக்கு 
உன்னைப்பற்றிக்கொள்கிறது. 
கவலையும் கண்ணீரும் 
அதன்பாதையை 
வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 
ஒவ்வொரு மைல்கல்லாய் 
கடந்து வரும்போது 
அந்த காக்கையைபோல 
நீயும் 
ஒவ்வொரு கல்லாய் போட்டு 
தாகம் தணித்துக்கொள்கிறாயே! 
உன்னால் இது எப்படி முடிந்தது? 
ஆம் 
வாழ்க்கை ஒரு தாகம். 

====================================
07.10.2016

யோகாவும் மோப்பம் பிடிக்கும் நாயும்

யோகாவும் மோப்பம் பிடிக்கும் நாயும்

===================================================ருத்ரா



உலக மகா யோகா தினத்தில்

அந்த "மோப்பம் பிடிக்கும்"

ஜாதி நாய்கள்  கூட‌

யோகா செய்து அசத்தியதாமே.



அது சரி.

அதுக ரொம்ப கூர்மையா

மோப்பம் புடிக்கும்னு சொல்றாங்களே.

எங்கேயோ கொண்டுபோய்

குப்பை மாதிரி குவிச்சு வச்சிருக்கிற‌

அந்த "வாக்கு எந்திரங்கள்" பக்கம்

அதை

போக விட்ராதீங்க.

அப்றம் எல்லாமே குப்ற கவுந்து

யோகா பண்ண ஆரம்பிச்சிர

வேண்டியது தான்.



=====================================================
22.06.2019



ஞாயிறு, 23 ஜூன், 2019

Colors of melancholy









Colors of melancholy
=====================================ruthraa


Who is painting?
my blood and bones
Along with moods and murals
Quote me always
Life and death of words.
Smiles and tears of moments.
The man reduces to the
rubbish of "selfies".
he feels stripped off 
to his deadly obscenities.
the void and fury is his thirst..
his gunful eyes trigger
the intolerance 
to tear all of  our masterpieces of
art and culture.
why these vultures and their eggs
make all these computers
their play tools of
a "doomsdom" discarding all
their beauties of humanity in all its labyrinth
and with lust
to build the sepulchre.

=========================================================

சனி, 22 ஜூன், 2019

"ஒரு மீள் பதிவு"

"ஒரு மீள் பதிவு"
================================================ருத்ரா


இது நான் முதன் முதல் "இணைய இதழில்" ("திண்ணை")எழுதிய கவிதை.விசைப்பலகை வழியே பயணம் தொடங்கி காகிதம் பேனாக்களுக்கும் விடை கொடுத்து "பத்தொன்பது ஆண்டுகள்" உருண்டுவிட்டன.இது மீண்டும் திரும்ப முடியாத வனவாசம்.இன்றைய கணினியுகத்தில் இந்த "ஆப்"ஸ்களின் ஆரண்யத்தில் பொன்மான்களாய் ஓடுவது கணித நுட்பங்களின் குவாண்டம் மெகானிக்ஸும் பூலியன் அல்ஜீப்ராவும் தான்.தொழில் நுட்பம் நம்மை உரித்த கோழிகள் ஆக்கிவிட்டன.அந்த ஓடைக்கரையில் அசையும் "ஒரு சேவற்கொண்டை "நாணல் பூ கூட" கிராஃபிக்ஸில் மலட்டுச்சித்திரங்களாய் நமுட்டுச்சிரிப்புகளை உதிர்க்கின்றன.
இந்த "கவிதையின்" மீள்பதிவை உங்களிடையே பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

===================================================================================================




AnyindianDesign elementThinnai
ThinnaiDesign elementதிண்ணை    



ooo ooo ooo ooo
Main Sections
முகப்புஅரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
This story was sent toruthraasivan@gmail.com


Sunday May 14, 2000

இதோ ஒரு வார்த்தை

- ருத்ரா.


இளைஞனே!
உணர்ச்சியின் 'பஃறுளியாறே '
காதல் எனும்
'குமாிக்கண்டத்துள் '
நீ மூழ்கிப்போகுமுன்
ஒரு வார்த்தை.
காதல் பற்றி
புது புது வர்ணங்கள்
பூசுவதற்கு
புருசு தேடுவதே
கவிஞர்களின் தொழில்.
ஃப்ராய்டிசத் தினவுகளின்
அந்த விளிம்பு
உடையும் வரை
இவர்கள்
வார்த்தைகளை
இரத்த சதைகளின்
பிருந்தாவனம்
ஆக்கிக்கொண்டே
இருப்பார்கள்.
சூாியனை
பட்டாம்பூச்சி ஆக்குவார்கள்.
அதனால்
மனிதவாடையே இல்லாத
'ஜு  'ராசிக் ' உறுமல்களின்
யுகத்திலிருந்து கூட
உன் கலித்தொகையையும்
அகநானூற்றையும்
தூசி தட்டிக்கொண்டிருப்பார்கள்.
பாறாங்கற்களுக்கிடையே
'ஃபாசில் 'களாய்ப்
படுத்திருக்கும்
அந்த படிமங்களிலிருந்து கூட
கற்காலத்து
'லைலா மஜ்னுக்களை '
தோண்டியெடுத்து
சினிமாப்பாட்டு
தயார் செய்துவிடுவார்கள்.
இண்டெர்னெட் எனும்
ஆகாய
நரம்பு முடிச்சுப்
பின்னல்களின்
சன்னல்கள் வழியே
அந்த
மின்னலின்
'கலர் 'க்கனவுகளை
'கச்சாஃபிலிமில் '
கர்ப்பம் தாிக்க வைப்பார்கள்.
கணிப்பொறி கூட
காதலுக்கு
கண்ணி வெடிகளைப்
புதைத்து வைத்திருக்கும்
'எலிப்பொறி ' தான்.
இளமையின் புயலே!
உன்
மத்தாப்புப் பிரபஞ்சத்தில்
இந்த 'பாப் கார்ன் ' பொாிகளா
சூாியன்கள் ?
கிறங்கிய விழிகளில்
புதுக்கவிதைகள்.
ஊற்றுத்தீயில்
உற்சாகவிளையாட்டின்
சோப்புக்குமிழிகள்.
ஹார்மோன்கள் ஓட்டுகின்ற
இந்த
குதிரைப்பந்தயத்தில்
வேகம்
மைல்களைத் தின்று விடுகிறது.
பயணம்
பாதையை விழுங்கி விடுகிறது.
பிள்ளைக்குட்டிகளை
பெருக்கிக்கொள்ளும்
இந்த பொம்மை விளையாட்டில்
காதல் எனும்
நெருப்பின் தேனாற்றை
உன்மீது
ஊற்றிக்கொள்கிறாய்.
முட்டையா ?
கோழியா ?
எது முதல் ?
இது
வெறும் பண்டாரங்களின்
பாட்டு அல்ல.
அந்த வினாக்களைத் தின்ற
விடைகளும்
அந்த விடைகளை
எச்சமிட்ட வினாக்களும்
இன்னும்
பல்கலைக்கழகங்களின்
தாழ்வாரங்களில்
இறைந்துதான் கிடக்கின்றன.
ஆனால்
உனக்கு
முட்டைக்குள்ளும் காதல்
கோழிக்குள்ளும் காதல்.
நீ
அவிழ்க்கவேண்டிய
புதிர்கள்
இன்னும்
புதர்களாய்
மண்டிக்கிடக்கின்றன.
வெளிச்சம் சுவைக்கும்
ஈசல் பூச்சிகளின்
இருட்டு இறக்கைகளில்
ஈர்ப்பும் துடிப்பும்
ஐன்ஸ்டான் சூத்திரங்களாய்
அவிந்து கிடக்கின்றன.
உன்
மில்லினியக்கொண்டாட்டங்கள்
வெறும்
பூவாணங்களின்
தோட்டம் அல்ல.
இந்த மில்லினியம்
கரையாத கல்தூணும் அல்ல.
நிகழ்ச்சிகளில்
உருகியோடும்
மெழுகுவர்த்தி இது.
தீக்குச்சியை
இப்போது தான்
கிழித்திருக்கிறாய்.
காதல் எனும்
குச்சியோடு
எாிந்து முடிவது மட்டும்
வாழ்க்கை அல்ல.
நூற்றாண்டுகள்
முடியும்போது
அது
உன் தோரணங்களை
கேட்கவில்லை.
பனிக்கட்டித்துண்டுகள்
மிதக்கும்
ஸ்காட்ச் விஸ்கி கேட்கவில்லை
விடிய விடிய
உட்கார்ந்து கொண்டு
வானம் எனும்
கன்னிக்குடம்
உடைத்துக்கொண்டு வரும்
அந்த கற்பனைக் குழந்தைக்கு
போதை நர்த்தனங்களில்
உன்னை
பிரசவம் பார்க்கச்சொல்லவில்லை.
காதலைக்கொண்டாடுவதற்கு
மட்டும்
இந்த மில்லினியம்
உன் கையில் விழவில்லை.
மூக்குதுடைக்கும்
கைக்குட்டை கூட
உனக்கு
காதலியின் முகம்
ஆகிப்பொனதால்
அவள்
சுவாசப்பிரளயத்தில்
நீ
மூழ்கிப்போகும் முன்
இதோ ஒரு வார்த்தை.
உன் பங்குக்கு
என்ன தரப்போகிறாய் ?
இருட்டையா ?
வெளிச்சத்தையா ?
இந்த
நுரைப்படுகையில்
நீ
அமிழ்ந்தது போதும்.
பருக்கைக்கற்களில்
பளிங்குத் தாஜ்மகால் என்று
நீ
படுத்துக்கிடந்தது போதும்.
இளமைச்சூறாவளியே!
வெறும்
தெருப்புழுதியை
நீ
கிளப்பிக்கொண்டிருந்தது போதும்.
சமுதாயப்
பிணிகளையெல்லம்
சுட்டொிக்கும்
உன் எாிமலையின்
இமைகள் விாியட்டும்.
விழுச்சி கொள்!
எழுச்சிகொள்!
- ருத்ரா (இ.பரமசிவன்)



Thinnai 2000 May 14
திண்ணை

செவ்வாய், 18 ஜூன், 2019

தயிர்வடை தேசிகனும் யோகி பாபுவும்

தயிர்வடை தேசிகனும் யோகி பாபுவும்
=====================================================ருத்ரா

தலைப்பில் இருப்பவர்கள்
நகைச்சுவை நடிகர்கள்.
உருவ வித்தியாசமே
மேலே உள்ள நடிகர்களின்
நகைச்சுவை ரசிக்கப்படுவதற்கு
காரணம்.
தயிர்வடை தேசிகன்
வாயைத்திறந்தால் பற்களே
இருக்காது.
சொத்தை மிச்சங்களே இருக்கும்.
மேலும்
குச்சி உடம்பை சுற்றி
முணு நாலு சட்டை பேண்டுகளை
சுற்றி வைத்து உருவம் காட்டியிருப்பார்கள்.
இதையெல்லாம்
பார்த்தாலே போதும்
நமக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வரும்.
அதுவும் "அன்னையின் ஆணையில்"
சிவாஜி கணேசன்
இவரை வைத்துக்கொண்டு
லூட்டி அடிப்பதே பெரும் நகைச்சுவை தான்.

இப்போது
பம்பைத்தலையும்
சாயையில் கொஞ்சம் செந்திலும்
உள்ள யோகிபாபு
சந்தானம் போல் டைமிங் வசனம் பேசுவது
பெரும் காமெடியாய் ரசிக்கப்படுகிறது.
பேசும் வசனம் கூட
அவர் வாயாலா ?
இல்லை அந்த ஆப்பிரிக்கக்காட்டு
அடர்ந்த தலை அலங்காரத்தினாலா?
என்று தெரியவில்லை.
ஆனாலும் சிரிப்பு அலைகள்
தியேட்டரை திணற அடித்துவிடுகின்றன.
அதுவும் கோலமாவு கோகிலாவில்
நயன்தாராவை
ஒருதலையாக காதலிக்கும்
அந்த காக்காப்பார்வையும் சிரிப்பும் பேச்சும்
பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனாலும் நகைச்சுவை நடிகர்களின்
இலக்கணத்துக்குள்
முழுமையாக பொருந்தி வரவில்லை.
ஆனால் நகைச்சுவையையும் தாண்டி
சினிமாக்களின் கதை நகர்த்தலுக்கு
அவர் பெரிதும் விறு விறுப்பு காட்டியிருக்கிறார்.
சந்திரபாபு
ஒரு காலகட்டத்தின் புள்ளியில்
தன்னை கோமாளித்தனம் செய்யும்
பாத்திரமாக கருதாமல்
ஒரு சிறந்த பாத்திரப்படைப்பில்
புகுத்திக்கொண்டு
படம் எடுத்தார்.
அது தான் "தட்டுங்கள் திறக்கப்படும்"
படம் சிறப்பாக அமைந்தது
வணிக முறையில் முந்திவரவில்லை.
நகைச்சுவை நடிகர்களுக்கே உள்ள காம்ப்ளெக்ஸ் அது.
அதில் எப்போதும்
முன் நின்று வென்றவர் நாகேஷ்.
அவருடைய "சர்வர் சுந்தரம்"
"நீர்க்குமிழி" "எதிர்நீச்சல் "
போன்றவை அற்புதமான சாதனைகள்.
கவுண்டமணி ..செந்தில்
வடிவேலு
விவேக்
பட்டியல் முடியவில்லை தான்.
இவர்களின் நகைச்சுவைப்  பேராறு
திரைப்படைப்பின் இலக்கியத்தை
ஆழமாகவும் கூர்மையாகவும்
ஆக்கியிருக்கிறது.
இவர்களின் தடங்களும் இடங்களும்
வேறு வேறானவை...அவை
மீம்களுக்கு சோறு
போட்டுக்கொண்டிருக்கின்றன .

இந்த ஓடுகளத்தில்
"கூர்க்கா"வாக  வெல்ல வருகிறார்.
யோகி பாபு.
பாத்திரம் தான் கூர்க்கா.
நடிப்பின் நிமிர்வில்
நிச்சயம் அவர் ஒரு ராஜ ராஜனாக‌
சிறந்து நிற்பார் என நம்புகிறோம்.
அவருக்கு
நம் மனங்கனிந்த வாழ்த்துக்கள்!

=================================================



தமிழ் வாழ்க‌

தமிழ் வாழ்க‌
==============================================ருத்ரா

தமிழ் வாழ்க என்று
ஒலித்ததும்
வீம்புக்காக அடிவயிற்றைப்
பிடித்துக்கொண்டு
பாரத் மாதா கி ஜெய்யும் ஒலித்தது.
எங்கள் அன்பான‌
இந்திய உடன் பிறப்புகளே
இப்படி அடிவயிற்றை
பிசைந்து கொண்டு ஒலிப்பதை விட‌
இந்திய மண்ணின்
அடிவயிற்றைத்தொட்டுப்பாருங்கள்.
ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பு
அங்கு புதைந்திருந்த
சிந்து வெளி நகர் முறையை
அந்த முத்திரை எழுத்துக்களின்
ஒலி பெயர்த்த மொழியினை
அறிவின் சிந்தனை ஒற்றிய‌
உள்ளத்தோடு பொருத்திப்பாருங்கள்.
அதை உற்றுக்கேளுங்கள்
தமிழ் வாழ்க என்பதன்
முதல் ஒலியும் அதில்
இழைந்திருக்கும்.
தமிழ்நாடு என்பதே இந்தியா
எனும் சிந்தியா
என்பதும் புரிந்திருக்குமே!
சிந்து எனும் தமிழ்ச்சொல்
நீர்ப்பெருக்கத்தை குறிக்கும்.
நீரோட்டம் போன்று
ஒரு செய்யுள் நடை நம்மிடம்
உண்டு.
அது சிந்தியல் வெண்பா.
உயர் மொழியாய் போற்றப்படும்
சமஸ்கிருதம் கூட‌
தமிழர்கள்
நமக்கு நாமே என்று
உருவாக்கிய மொழி தான்.
பாருங்கள் வெறும் பங்காளிக்காய்ச்சல்
"பாரதப்பெரும்போரையே"
நடத்திவிட்டுப்போயிருக்கிறது.
அது போல்
ஒரு வரலாற்றுக்காய்ச்சல்
தமிழன் உருவாக்கிய சமஸ்கிருதத்தை
தமிழுக்கே எதிரியாக்கி
அல்லது
அந்த சமஸ்கிருதத்தைக்கொண்டே
தமிழை விழுங்கியே தீருவது
என்ற‌
அதே பங்காளிக்காய்ச்சலின்
பாரதப்பெரும்போர் நடத்திக் கொண்டிருக்கிறது.
கடல் என்பது தமிழில்
பரவை ஆகும்.
அந்த பரவையின் பரதவனே
நம் வியாசன்.
தமிழ்
சமஸ்கிருதத்தை
என் மொழி என்று
உரிமை கொண்டாடுகிறது.
அதன் எழுத்து வடிவமான‌
"தேவ நாகரி" என்பதே தூய தமிழ்ச்சொல்.
நகர் எனும் வினையாகுபெயர் நகர் ஆனது.
நகரவியல் இங்கு நாகரி ஆனது.
தீ என்பதை முதலில் கண்ட அந்த தமிழன்
"தீவன்" ஆனான்.
பிறகு உயர்வு நவிற்சியாய் தேவன் ஆனான்.
தன் நாவினால் வல்லவன் ஆகி
நாவலன் ஆனான்.
அந்த நாவலன் தீவன்கள் உறையும் இடம்
நாவலன் தீவம் ஆகி நாவல‌ந்தீவு ஆகிற்று.
தமிழன் வாழும் இடம் நாவலந்தீவு ஆயிற்று.
தமிழன் வாழ்ந்த இடத்து மரங்கள்
நாவல மரங்கள் ஆகி நாவல் மரங்கள்
ஆகியிருக்கலாம்.
நீ உமியைக்கொண்டுவா
நான் அரிசியைக்கொண்டு வருகிறேன்
ஊதி ஊதித்திங்கலாம் என்ற கதை தான்.
இடையில்
நான்கு வர்ணம் ஐந்து வர்ணம் என்று
வியூகம் வகுத்து
வெறி வளர்த்து
போர் வளர்த்து
கண்ணுக்குத்தெரியாமல் அழல் வளர்க்கும்
இந்த பாரதப்போர் நிறுத்தப்படவேண்டும்.
அரிசிக்கும் உமிக்கும் அடிப்படை
நெல் எனும் தமிழே.

ஆகவே
தமிழ் வாழ்க‌
தமிழ் வாழ்க‌
தமிழ் வாழ்கவே!

========================================================

திங்கள், 17 ஜூன், 2019

தண்ணீரு அப்ப்டீன்னா...?

தண்ணீரு அப்ப்டீன்னா...?
=================================================ருத்ரா
(ஒரு கற்பனைப்பேட்டி)


தண்ணீரு
அப்டின்னா என்னப்பா?

என்ன இப்டி ஆயிட்டீங்க?

அதான் கேக்ரேன்ல சொல்லு.

இதுக்கே இப்டியா?
அப்டீன்னா தண்ணீர்ப்பஞ்சம்னா...?

அட! தண்ணீருன்னா என்னன்னே தெரியலே
அப்றம்லா பஞ்சத்தப்பத்தி பேசணும்.

அதான் தாகம் எடுத்தா குடிப்பம்லா

எந்த தாகம் ?

தொண்ட வரண்டு தாகம் எடுக்குமே

எந்த தொண்ட?

இத வச்சு தான சார் மேடையில பேசுறிய்ங்க..

எந்த மேடை?..

மந்திரி மடக்குகிறார்.

பத்திரிகையாளர்கள் மடங்கிப்போகிறார்கள்.

ஒரு பத்திரிகையாளர் துணிந்து கேட்கிறார்.

மந்திரி சார்..அப்ப‌

உங்க பேரு

"வேலுமணியில்லையா"

"வடிவேலு"மணியா?


==================================================

ஜெயமோகனும் புளிச்ச மாவும்.

ஜெயமோகனும் புளிச்ச மாவும்.
==================================================ருத்ரா

புளிச்சமாவு ஒரு அலிபி.
அந்த திமுக கடைக்காரருடன்
கொஞ்சம் உரசினால்
டெல்லி வரைக்கும்
அதிர்வு எண் ரிக்டேர் ஸ்கேல்
கொஞ்சம் எகிறினால் சரி.

தோசை மாவு
புளித்தாலும் பிரச்னை.
புளிக்காவிட்டாலும் பிரச்னை.
இவர் புளிச்ச பிரச்னையையே
கையில் எடுத்துக்கொண்டார்.
வியாசர் எழுதித்தள்ளி
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்
புளித்த இதிகாசத்தையே
ஆண்டுக்கணக்கில்
நாவல் எழுதும் அசகாய சூரர்
அல்லவா இவர்!

எனக்கு ஒரு ஆச்சரியும்.
தலையணை தலையணயாய்
எழுதித்தள்ள வேண்டிய "ப்ராஜெக்ட்"
கையில் இருக்கும்போது
எதற்கு இந்த தள்ளு முள்ளு?
பொன்னான நேரம் இவருக்கு
இப்படி விரயம் ஆகலாமா?
எப்படி இருந்தாலும்
அந்தக் கடைக்கார்
இவர் எழுத்துக்களுக்கு
மரியாதை செய்திருக்கவேண்டும்.
இவர் நாகம் என்றும் கருடன் என்றும்
எத்தனை வியூகங்கள் அமைத்துக்கொண்டு
குருட்சேத்திரப்போருக்கு
கங்கணம் கட்டிக்கொண்டு வந்தாலும்
அந்த சண்டை சச்சரவை
வெறும் பொம்மை சண்டையாக‌
மாற்றியிருக்கலாம் அந்த கடைக்காரர்.
இவர் ஆஸ்பத்திரியில்
எல்லாம் போய் படுத்துக்கொண்டு
சாணக்கியங்கள் செய்ததைப்பார்த்தால்
வரப்போகும் சட்டசபைத் தேர்தலையும்
மோடிஜி அவர்கள் பாணியில்
கழுவி ஊற்ற திட்டம் இருக்குமோ
தெரியவில்லை!

எது எப்படி இருந்த போதும்
அவர் எழுதும் தமிழுக்காகவாது
கடைக்காரர்
இறங்கிப்போயிருக்கவேண்டும்.
முரசுக்கட்டிலில் கொஞ்சம் அயர்ந்து
படுத்து விட்டார் என்பதற்கு
"அந்த மோசிகீரனார்" என்ற‌
தமிழ்ப்புலவர்க்கு தண்டனை தராது
அவர் களைப்பு தீர கவரி
வீசியவன் அல்லவா
அந்த தமிழ் மன்னன்.
தமிழின் தண்மையை
நாம் மறக்கவே கூடாது தான்.
கடைக்காரர் முணு முணுப்பது
நமக்கு கேட்கிறது.
இவர் ஒன்றும்
தமிழை உயிராய் மதிக்கும்
மோசி கீரனார் இல்லை.
தமிழை தன் அறிவால் கூர் தீட்டி
அந்தக்கத்தியைக்கொண்டே
தமிழைக் கூறு போடத் தயங்காதவர்.
திராவிட வரலாற்றையே
சனாதன ஆதிக்கக்காரர்களுக்கு
பலி கொடுக்க எண்ணிக்கொண்டிருப்பவர்.

புளிச்சமாவுகூட இந்த நாட்டில்
புனிதம்தானே.
அப்படியிருக்க
எதற்கு ஏன் இந்த வீண் சண்டகள்?
ஊடக மொழியில்
இதற்கும் கூட இங்கே
ஹிட் ரேட் அதிகம் அல்லவா!

================================================================



ஞாயிறு, 16 ஜூன், 2019

பண்பு மிகு பா.ரஞ்சித் அவர்களே

பண்பு மிகு பா.ரஞ்சித் அவர்களே
===============================================ருத்ரா

ராஜராஜ சோழன் பற்றி
ஒரு திரைக்கதை
எழுதத்துவங்கியிருக்கிறீர்கள்.
ராஜ ராஜ சோழன் என்று இல்லை
எல்லா அரசர்களின் வரலாற்றுப்பாதையிலும்
எளிய மக்கள் பூச்சி புழுக்களாய்
நசுங்கியிருக்கும் சில
மூலைப்பக்கங்களும் உண்டு.
அதை தூசு தட்ட தாங்கள் கிளம்பியிருப்பது
ஒரு சமூகநீதியை நிலைநாட்ட‌
நீங்கள் அடிக்கும் ஆராய்ச்சி மணியா?
அந்த மணியொலியில்
நியாயத்தின் தாகம் இருக்கலாம்.
ஆனால்
நீங்கள் இந்த
"செட்டிங்க்" ஒன்றை உருவாக்கி
ஒரு ரஜனி படத்தை
ரஜனி இல்லாமலேயே
படம் காட்ட கிளம்பிவிட்டீர்களோ
என்ற ஐயம் தலை தூக்குகிறது.
திரை இல்லாமலேயே ஒரு "ஹொலோகிராஃபிக்"
சினிமா காட்ட முற்பட்டு விட்டீர்களா?
இன்றைக்கு அயோத்தியில் ராமர் கோயில்
கட்டப்போகிறார்கள்.
அதில் உள்ள அடி நெருப்பை
நீர்த்துப்போக தமிழ் நாட்டில்
இப்படி ஒரு படம் பிடித்து
ஒரு இயக்குநர் சிகரங்களின் சிகரம்
ஆகப்போகிறீர்களோ?
சாதி நெருப்பின் தீப்பொறி
அந்த ராமராஜ்யத்திலேயே இருக்கிறதே.
நான்கு வர்ணங்களில்
மூன்று வர்ணங்கள்
அந்த உயர்ந்த அறிவான "வேதத்தை"
கேட்கலாம் கற்கலாம்.
நான்காவதான உழவு வர்க்கமும்
மற்ற ஊழிய வர்க்கமுமான‌
சூத்திரர்கள் வேதத்தைக்கேட்டாலே
காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று
என்ற நியதி இருந்ததே!
அப்படியென்றால்
நீங்கள் எதிர்க்கவேண்டியது
ராஜ ராஜ சோழனை அல்ல‌.
ராமச்சந்திர பிரபுவை எதிர்த்து அல்லவா
அந்த முதல் ஆராய்ச்சி மணியை
அடித்திருக்கவேண்டும்?
அதே ராமனைத்தான்
இந்த சோழர்களும் பாராயணம் பண்ணினார்கள்
என்பதும் வரலாறு தான்.
ராமன் காலத்திலேயே எய்யப்பட்ட‌
அம்பு
நம் மார்பில் இன்னும்
துளைத்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் அது சாதி சடங்குகளின்
மராமரங்கள் வழியே
நம் மீது பாய்ந்திருக்கிறது
என்பதையும் நீங்கள் அறிவீர்களே!
ஆனாலும் ராஜ ராஜ சோழன் என்பவன் மீது
ஒட்டியிருக்கும்
ஆரியன் அல்லாத
திராவிடன் என்னும்
ஏதோ ஒரு வெளிச்சம் பாய்ந்திருக்குமோ?
அதை முதலில் இருட்டடித்தால்
திராவிடம் இல்லாத தமிழகம்
உருவாக்கும் இந்த வேள்வியை நடத்தலாமா
என்று
நீங்கள் ஏவப்பட்டிருக்கிறீர்களோ
என்ற ஒரு நியாயமான‌
அச்சமும் இங்கு படர்ந்திருக்கிறது.

======================================================


சனி, 15 ஜூன், 2019

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை
=============================================ருத்ரா

பாரதி புதுமைப்பெண்ணுக்கு
எழுதிய வரிகளை
கார் பந்தய வீரர் அஜித்துக்கு
எப்படி பொருத்தினார்கள்?
தல‌
"சால்ட் அன்ட் பெப்பர்" விக்கில்
திரையில் தோன்றினால் போதும்!
இந்த தலைமுறையினரின்
தலைகள் எல்லாம்
ஆனந்தம் தாளாமல் கிறுகிறுத்துப்போகும்.
இந்த சமுதாயத்தில்
எந்த மூலையில்
எவர் தலையில்
எப்படி இடி வீழ்ந்தால் என்ன?
இந்த தலைகளுக்குள் அது
நுழைவதே இல்லை.
வில்லன் மட்டுமே
பூதாகாரமாய்
நின்று
இவரிடம் அடி வாங்கி அடி வாங்கி
நொறுங்கிப்போவான்.
1952ல் முதன் முதல்
சிவாஜி கணேசன் திரையில்
முகம் காட்டிய போது
அது பகுத்தறிவு வெளிச்சம் காட்டியது.
எம்.ஜி.ஆரும்
சமுதாய மறுமலர்ச்சியை
பூக்க வைக்க நடிப்பைக்காட்டினார்.
இந்த தமிழ் மண் அவர்களை
உள்வாங்கியது.
இந்த சமுதாய பிரக்ஞை
ஏன் அஜித்திடம் இல்லை?
"ஆசை நாயகனாய்"
வலம் வந்தவர்
அப்படியே அதிரடிக்கதாநாயகன்
ஆகினார்.
அப்புறம்
கட் அவுட் பால்குடங்கள்
கலாச்சாரத்தில்
வானுயர நிமிர்ந்தார்.
அப்போதும் கூட‌
ஆஞ்சனேயா வடைமலை என்று
இவரும் கூட‌
ஆத்மீகம் என்று பெயர்சொல்லாத‌
ஆத்மீகத்தை தான் இவர் ரசிகர்களுக்கு
பொதிந்து கொடுத்தார்.
ஆனால்
வசூல் மழை இவர்காட்டில் தான்.
தமிழ் நாட்டு இளைஞர்கள்
இந்த சினிமாக்கள் மூலம்
திசைகளை இழந்து போனது தான்
மிச்சம்.
அய்ய..தமிய் தமிய்ன்னு
எப்போதும் பேஜாராப்போச்சு.
ஜம்முன்னு ரெண்டு குத்தாட்டம்
செமையா நாலு ஃபைட்டு
அத்தோடு வுடுவியா?ன்னு

இந்த இளம்புயல்கள்
பேசிக்கொண்ட போதும்
அடியில் ஒரு புயல் வீச‌
அதுவும்
எந்த "பெயர் சூட்டலுக்கும்"
அடங்காத ஒரு புயலை
கைவசம் வைத்துக்கொண்டு தான்
இருக்கின்றன.

அந்த நம்பிக்கையே
இப்போது இந்த‌
நேர் கொண்ட பார்வை!

======================================================



வெள்ளி, 14 ஜூன், 2019

ஒரு காதல் கடிதம்


ஒரு காதல் கடிதம்
==========================================ருத்ரா

அன்பே..
உன் பெயரை எழுதக்கூட கூச்சம் தான்.
உன் பெயர் சொல்லிக்கூப்பிடுவதைக்கூட‌
அஞ்சி அஞ்சி தான் கூப்பிடுவேன்..
அது உனக்குத்தெரியுமே.
அது என்ன அச்சம் நாணம் படம் பயிர்ப்பு
என்று
எல்லாவற்றையும் நீங்களே எடுத்துக்கொண்டீர்களே
என்றெல்லாம் செல்லமாய்
என்னை அணைத்துக்கொண்டாயே
அன்றொரு நாள்...
ஆம்
அன்பே அன்பே...என்று
வாய் இனித்து அது கைவழியே
பேனா தொட்டு
உன் இதயம் தொட்டு
என் இதயம் தொட்டு...
...........
..........
அதற்குப்பிறகு காகிதம் இல்லை.
கரையான் தின்று முடித்திருந்தது.
பழுப்பு அடைந்த காகிதம்.
வருடமோ
தொள்ளாயிரத்து ஐம்பது அல்லது ஐம்பத்தொன்று
என்று அரைகுறையாய்
தெரிந்த எழுத்துக்கள்.
என் கசிந்த கண்களின் ஈரம் தொட்டு
எண்கள் கசங்கிப்போயிருந்தன.
காகிதம் எட்டாய் மடித்து வைக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் மடித்தால்
பொடி பொடியாகிடும்.
நான் எழுதிய கடிதத்தை என்னிடம்
கொடுத்துவிட்டு
அவள் எழுதிய கடிதத்தை அவளே
வந்து வாங்கிக்கொண்டு  விட்டாள்
ஆனால் அதை சுக்குநூறாய்
கிழித்துப்போட்டு விட்டு போய்விட்டாள்.
அவை காகித கந்தல் அல்ல.
எங்கள் இதயங்கள்.
அவள் விருட்டென்று சென்றுவிட்டாள்.
நான் அந்த காகிதச்  சுக்கல்களையெல்லாம்
பொறுக்கி எடுத்து
பொட்டலம் கட்டி வைத்திருக்கிறேன்.
அவள் எழுதியது
நெஞ்சில் கல்வெட்டு ஆகிப்போனது.
இந்த பொட்டலத்தில்
என் காதல்  "தொ ல் இயல் துறை"யின்
அலுவலகம் இருக்கிறது.
நிறைவேறாததே தான் என்றாலும்
"வேலண்டைன் டே "க்கள் தோறும் வந்து
அது தளிர்த்து விட்டு அல்லவா போகிறது!


 என் குழிவிழுந்த கண்களிலிருந்து
தேனருவியும் ஐந்தருவியும்
கசிந்து விழுந்து கொண்டே இருந்தது.


"போதும் போதும்.
பொக்கிஷத்தை மூடி வையுங்கள்"
என் மனைவி
வழக்கம்போல கடு கடுத்தாள்.
இந்த "தேவதாஸை"ப்பத்தி
எல்லாம் அவளுக்கும் தெரியும்.
இருந்தாலும்
என் மீது அவளுக்கு பிரியம் அதிகம்.
அது குறைந்தே இல்லை.
என் காதலை இவள் மீது தான்
நிழல் வீசிக்கொண்டிருக்கிறேன்.
இந்த ஒளியும் நிழலும்
ஒளிந்து விளையாடும்  வாழ்க்கையை
நானும் இவளும்
அனுபவித்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

"எந்திரியுங்கோ"
என் கையைப்பிடித்து
இவள் தூக்கினாள்.
அவள் ஸ்பர்சித்தாள்.

===============================================================

வியாழன், 13 ஜூன், 2019

ரஜனிக்கு ஓர் இடம்

ரஜனிக்கு ஓர் இடம்
===============================================ருத்ரா

சூப்பர்ஸ்டார் அவர்களே
உங்கள் ஜாதகத்து ராசிக்கட்டம்
உங்களை ஒரு
உச்சாணிக்கொப்பில்
உட்கார்த்தி வைக்கப்போவதாய்
இங்கே சிலர்
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஈர்ப்பு நிறைந்த
ஒற்றைத்தலைமை தேவையாம்!
உங்களுக்காக‌
ஒரு "புஷ் குல்லா"வும்
"கறுப்புக்கண்ணாடியும்"
இங்கே இவர்கள்
தயாராய் வைத்திருக்கிறார்கள்.
நீங்களோ
சினிமாவில் போடும் வேடத்தை
அங்கேயே  களைந்து எறிந்து விட்டு
வருபவர் ஆயிற்றே !
வழுக்கை விழுந்த உங்கள்
தலையை மக்களிடம்
மறைக்கவே விரும்பாத ஒரு
தூய மக்கள் கலைஞன்
அல்லவா நீங்கள்!

இப்போது நீங்கள்
கழுத்து நரம்பு புடைக்க‌
பஞ்ச் டைலாக் எல்லாம்
விடவேண்டியதில்லை.
இரு விரலால் மூக்கை நிமிண்டி

என்று சொல்லி
வெற்றிச்சின்னமாய்
அதே இரு விரலை விரித்துக்காட்டினால்
போதும்.
ஜப்பான் காரர்கள் கூட‌
அவர்கள் ஓட்டுகளை
இங்கே போட்டு விடுவார்கள்.
உலக நாடுகளின்
ஒட்டுக்கள் குவிந்தாலே போதுமே.
அப்புறம் என்ன?
அம்மா சொன்ன
நூறு ஆண்டுகளையும் தாண்டி
ஆயிரம் ஆண்டுகள் வரை
இந்த கட்சியை
அசைக்கவோ ஆட்டவோ
எந்த கொம்பனாலும் முடியாதே!
இந்த விண்ணப்பத்தை
ஏற்றுக்கொள்வதைப்பற்றி
உங்கள் "தமிழ் அருவிகள்" மற்றும்
வடநாட்டு சாணக்கிய திலகங்கள்
ஆகியவர்களின்
சமிக்ஞைகளையும்
கை காட்டல்களையும்
கலந்து கொள்ளுங்கள்.
அது திராவிடக்கட்சியாயிற்றே
உங்கள் ஆத்மீகம் என்ன ஆவது
என்று
நீங்கள் குழம்ப வேண்டாம்.
நான் ஆணையிட்டால் என்று
சவுக்கு தூக்கியவரும்
அதே வேகத்தில்
அன்னை மூகாம்பிகைக்கு
வெள்ளியில் வீரவாள்
காணிக்கை செலுத்திய‌வரும்
அவரே தான்.
இவர்களுடைய
அம்மாவின் ஆன்மாவோடு
அவரது வீர ஆன்மாவும்
இணைந்து
ஒரு கவசமாய் இந்தக்கட்சியை
காப்பாற்ற வேண்டுமானால்
ஒரு சூப்பர்ஸ்டாரின்
ஒற்றைத்தலைமையே
இப்போதைய தேவை.
போர் வரும்போது
பார்த்துக்கொள்ளலாம் என்றீர்களே !
இப்போது ஒரு உண்மை
உங்களுக்கு தெளிவாகும்.
இந்த போரை
தங்கள் சதுரங்க காய்கள் கொண்டு
நகர்த்தி விளையாடும்
அந்த மத வாத ஆதிக்கங்களின்
தந்திரத்தை இன்னுமா
நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.
மதம் வேறு
ஆன்மீகம் வேறு
இந்துத்வா
இந்து தத்துவம் வேறு
என்று
உங்கள் பாபா போதிக்கவில்லையா?
களம் காண வாருங்கள்
எங்கள் கனவு நாயகரே !

=======================================================






புதன், 12 ஜூன், 2019

தந்தையர் தின விழா

தந்தையர் தின விழா
=============================================ருத்ரா

தந்தை சொல் போல‌
மன் திறம் மிக்க
சொல் வேறில்லை.
மன்னு என்னும் மன்
எனும் சொல்லுக்கு
நிலைத்து இருத்தல்
என்றே பொருள்.
நம் உள்ளம் அதன் ஊற்று
யாவும் என்றும் நிலைத்து
பொங்குவது ஆகும்.
மன் எனும் வினையாகுபெயர்
தான்
மனிதன் என்ற சொல்லை
உருவாக்கியது.
தந்தையின் சொல்
அந்த மன் திறமே அன்றி
வேறு மந்திரம்
ஏதுமில்லை.
தந்தை என்றால்
மகனே
நான் இறந்தால்
பிண்டம் படைத்து வைத்து
கும்பிடுவாயா?
என்று கேட்கும்
மக்கிப்போன கருத்துக்களின்
பிண்டம் அல்ல.
மகனே
இந்த உலகமே உன்னுடையது.
இந்த வானம் உன்னுடையது.
ஏன்
இந்த பிரபஞ்சம் கூட‌
உன் அறிவின் கூரிய விரல்களால்
பிசைந்து பிசைந்து
புதிது புதிதாய் வார்க்க‌
இயல்வது.
"ப்ரேன் காஸ்மாலஜி" என்று
ஒரு கணிதத்தில்
சவ்வு மிட்டாய் செய்து
இந்த பிரபஞ்சத்தை
தோலுரித்துக்கொண்டிருக்கிறார்களே
விஞ்ஞானிகள்
அவர்களின் அறிவுக்கண்
உன் கண்களில் பதியம் ஆகட்டும்!
முன்னோர்கள் சொன்னதன்
வெளிச்சத்தை
உள் வாங்கிக்கொள்.
அந்த வெளிச்சத்தை விட்டு
வெறும் தீவட்டித்தடியனாய்
அடிமைகளாய்
இந்த ஆதிக்கத்துக்கு
பல்லக்கு தூக்காதே.
தந்தையின் இக்குரல்களே
பிள்ளைகள் நடக்கும்
காலடித்தடங்கள்.
வேறு காலடி அல்ல.
மூடத்தனத்தையும்
அறியாமையையும்
காவடி தூக்கும் தோள்களா
உந்தன் தோள்கள்.
அந்த இமயத்தில்
உன் அடையாளத்தை
பொறித்துவிட்டு வந்தார்களே
அந்த தந்தையர்கள் மண் இது!
அந்த வீரத்தோள்களே
நீ ஏறி விளையாடுமிடங்கள்!
அங்கே
தவம் செய்ய
கூப்பிடுகிறார்கள் என்று
காவி உடுத்திக் கிளம்பிவிடாதே.
அவர்கள் பேசும்
ஆன்மீகத்தை
உன் "ஆண்மீகத்தால்"
மறுத்து நில்.
மீசை முறுக்கி நில்!
அந்த "தந்தையின்"
குரல் இது.
நிமிர்ந்து நில் தமிழா!
நிமிர்ந்து நில்.

========================================================


தமிழ்த்தேனீ


https://www.dinamani.com/tamilnadu/2019/jun/13/காலமானார்-பேராசிரியர்-இராமோகன்-3170074.html
mohan



தமிழ்த்தேனீ 
===============================================ருத்ரா 


செந்தமிழ்ச்சோலையின்
கொங்கு தேர் வாழ்க்கை 
அஞ்சிறைத்தும்பியாய் 
காமம் செப்பாது 
கண்டது மொழிந்து
கனித்தமிழ் ஆய்ந்த 
"தமிழ்த்தேனீ"அவர்களே!
உங்கள் சிறகுகள் உதிர்ந்து
ரீங்காரம் நின்றபோதும்
மின் தமிழ் ஏடுகளில்
உங்கள் அதிர்வுகள்
தமிழிசை மீட்டும்.
உங்கள் புகழுடல் என்றும்
நிலைக்கும்!
தமிழ் என்றே என்றும்
அது ரீங்கரிக்கும்.
அது தின"மலர்" அல்லவா
அதனால்
மறக்காமல் குறிப்பிட்டது
"தமிழ்த்தேனீ"என்று.
அது படித்து துணுக்குற்று
அஞ்சலிகள் இட்டேன்
இங்கே இந்த வரிகளை நான்.

இரங்கல்களுடன்
ருத்ரா
- show quoted text -