சனி, 24 ஜூன், 2017

பீச்சாங்கை


பீச்சாங்கை
========================================ருத்ரா

சில சினிமாக்களை விட‌
அதன் தலைப்பு
மிக மிக அற்புதமான‌
கவிதையாக ஆனது உண்டு.
அப்படியொரு தலைப்பு
"நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம்"
அந்த சினிமாவும் அருமை தான்.
ஆனால் இந்த‌
"பீச்சாங்கை"..
"ஏலியன்  ஹேன்ட் சிண்ட்ரோம்"
எனும் மருத்துவ விஞ்ஞானத்தை
மசாலாக்கள் சேர்த்து
படம் ஆக்கியிருக்கிறது.
அரைத்த மாவையே அரைப்பது சினிமா அல்ல‌
என்று
அதிரடிகளுக்கு மேல் அதிரடிகளையே
வெடிக்க வைத்துக்கொண்டிருப்பது தான்
இளைய யுகத்தின்
மூச்சுக்காற்று என்று
இந்த சினிமாக்கள் கலக்கிக்கொண்டிருக்கின்றன.
நேரடியாக நம் மூக்கின் மேலேயே
வந்து நெடியடிக்கும்
யதார்த்தங்களை
ஃப்ரேமுக்கு ஃப்ரேம்
படைத்துக்காட்டுவது தான்
இளைஞர்களின்
இன்றைய தாகம்.
இன்றைய வேகம்.
இப்படத்தில் சமுதாயத்தை
அப்படியே புரட்டிப்போடும் சமாச்சாரம்
ஒன்றும் இல்லாவிட்டாலும்
ஒரு மயிரிழையில்
(அது தான் அந்த ஆங்கில வியாதி)
மூன்று மணி நேர கனமான சினிமாவை
கட்டித் தொங்கவிட்டு
ஊஞ்சல் ஆட்டியதற்கு
நம் பாராட்டுகள்.
அடித்தட்டுக்குழிகளில்
புழுவாய் நெளிந்து கிடக்கும்
மனிதர்களின்
வலியையும் ரத்தத்தையும்
அப்படியே எழுதும்
சொல்லினால் ஒன்றும்
நாற்றம் வந்து விடப்போவதில்லை.
இந்த சமுதாய வக்கிரங்களின்
சூடு பொறுக்காமல் தான்
இந்த "பீச்சாங்கை"தலைப்புக்கள்!
கதைக்குள் வருகின்ற
காதல் கத்தரிக்காய்கள் மற்றும்
சண்டைக்காட்சிக்கள்
காமெடிகள் எல்லாம்
சத்தூசிகளாக செலுத்தப்பட்ட போதும்
அவை வெறும் தண்ணீர்
பீய்ச்சும் கைகள் தான்.
ஆனந்த விகடன்
இந்த புதிய தலைமுறைப்படங்களுக்கு
எப்போதும்
நாற்பதுக்கு மேல் மார்க்குகள்
போடுவதன் மூலம்
தான் நிச்சயம் பழமைவாதி இல்லை
என்று காட்டிக்கொள்ள
தனக்குத்தானே
போட்டுக்கொண்ட மார்க்குகள் தான்.
ஆனாலும் புதுமைப்படைப்பாளிகள்
ஊக்கப்படுத்தப்பட வேண்டும்
என்பதில் எந்த முட்டுக்கட்டையும் கூடாது.
கொஞ்சம் தம்பட்டம் ஒலிப்பதால் தான்
இந்த விமர்சனம்.
நடு நிலை எழுத்துக்களின்
வலதுகை  பக்கம் புகழ்வது
பீச்சாங்கை பக்கத்திற்கு
தெரியக்கூடாது அல்லவா.


=========================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக