சனி, 24 ஜூன், 2017

ஒரு சொல் கேளீர் !

ஒரு சொல் கேளீர் !
=============================================ருத்ரா

"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!"

"யாதானும் நாடாமால் ஊராமால்..."

கணியன் பூங்குன்றனும் வள்ளுவனும்
இதை விடவா
ஒரு விரிந்த வானத்தை
தன் சுவடிகளில் வரைந்து காட்டவேண்டும்.
அவர்கள் காலத்தில்
கல் என்றால்
நம் மண்டையை உடைத்துக்கொள்ளும்
சண்டைகளின் கருவி அல்ல அது.
அந்த கற்காலத்தை தாண்டி
பொற்காலம் படைத்த காலத்தின் பரிணாமம் அது.
கல்லைப்பிளந்த வெளிச்சத்தில்
பல பல்கலைக்கழகங்களை
கண்டவர்கள் அவர்கள்.
கல் கொண்டு
வீடுகள் அமைத்தார்கள்.
நகர்கள் உருவாக்கினார்கள்.
ஏன்
கலையும் கற்பனையும்
அவர்கள் உள்ளங்களில்
பிசைந்து நின்றபோது
கல் குழைந்து போய்
அவர்கள் விரல்களில்
சிற்பங்கள் ஆனது.
தம் வரலாற்றை கல்வெட்டுகளாய்
பதித்துக்காட்டினார்கள்.
கல்வி எனும் சொல்லில்
பகுதி விகுதி உரிக்கும் இலக்கணப்புலவர்களே
கல் நம் தமிழர்களின்
பகுதி ஆயிற்று.
நம் மூச்சுகள் ஆயிற்று.
நம் எழுத்துகள் ஆயிற்று.
அதன் சிற்றுளியின் ஒலிப்பிஞ்சுகளில்
நம் வரலாற்று எதிரொலிகள்
ஒலிக்கும் களம் ஆயிற்று.
அப்புறம் எப்படி
கல்லெறியும் வெறியின்
அடையாளமாய் அது ஆனது?

கல்லை மேலும் மேலும் உரித்து
அதனுள் கசியும்
அந்த ரத்த விளாறுகளை
என்ன வென்று தான் பார்ப்போமே.

(தொடரும்)
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக