வெள்ளி, 23 ஜூன், 2017

கங்கா ஜலம்

கங்கா ஜலம்
============================================ருத்ரா

முன்பொரு சமயம்
வடஇந்தியாவில்
பீஹாரிலோ உ.பி யிலோ
ஞாபகம் இல்லை....
மத்திய மந்திரி என்ற நிலையில்
திரு.ஜகஜீவன்ராம் அவர்கள்
மகாத்மா காந்தி சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செய்தபின்
மேடையை விட்டு இறங்கி சென்றார்.
ஆனால் அதற்குபின்
"சனாதனிகள்"
அந்த சிலையில் கங்காஜலம் இட்டு
தீட்டு கழித்தார்களாம்
பாருங்கள்!
பனி இமயம் வெயிலில்
இமைதிறந்து
கண்ணீராய் உருகி வரும்
கங்கை
இராமாயண காலத்திலிருந்தே
இப்படி தீட்டு பட்டு போயிருக்கிறது.
ஆம்! சனாதனிகளின்
சாக்கடைச்சிந்தனைகளும் கைளும்
தீண்டிய கங்கை அல்லவா?
அப்போதைய ராமராஜ்யத்தில்
வேத ஒலிகளைக்கேட்ட‌
சூத்திரர்களின் காதில்
ஈயத்தைக் காய்ச்சி ஊற்று
என்ற கொடுங்கோலர்களின்
நீதிமுறைகள் தானே இருந்தாக‌
சொல்கிறார்கள்.
அந்தப்படைதானே
இன்றைக்கும் காக்கி டவுசரும் கம்புமாய்...
அனுமன் சேனையாய் அலைகிறது...
அப்படியொரு ஆர் எஸ் எஸ் படையில்
தொண்டாற்றியவரா
நம் முதல் குடிமகனாய் இருந்து
தீண்டாமையை நீக்கப்போகிறார்?
இவர்
அவர்கள் நடத்திய "மோர்ச்சா"வுக்கு
அவர்களின் முகமூடியின் மேல்
ஒரு முகம் மாட்டப்போயிருக்கலாம்.
முகத்தை அவர் இன்னும் களையவில்லை.
அவர்கள் முகமூடி என்றோ கழன்று விட்டது.
தீண்டாமையின் தீக்காயம்
இந்தியாவின் இதயத்தில் இன்னும் ஆறவில்லை.
தலித்துகள்......
அமுக்கப்பட்ட‌
அசிங்கப்படுத்தப்பட்ட‌
அடக்கி ஒடுக்கப்பட்ட
மானிடத்தின்
ஒரு வரலாற்று அடையாளம்.
ஆனால்
இன்னும் ஒரு
ஏமாற்று வித்தை அடையாளத்தை
இங்கே அரங்கேற்றப்பார்க்கிறது
காவி சாணக்கியம்.
ஜனநாயகப்பொறுப்பும் கடமையும்
உள்ளவர்கள்
பெருமதிப்பிற்குரிய ஜகஜீவன்ராம்
அவர்களின் புதல்விக்கு
அந்த உயரிய இடத்தை அளிக்கவேண்டும்!
வாழ்க மக்கள் ஜனநாயகம்!

=====================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக