செவ்வாய், 13 ஜூன், 2017

"சங்கிலி புங்கிலி கதவ தொற"

"சங்கிலி புங்கிலி கதவ தொற"
=============================================ருத்ரா

பேய்களை விரட்ட‌
அமெரிக்க "கோஸ்ட் பஸ்டர்கள்"
எல்லாம் தேவையில்லை.
இப்படி
காமா சோமா என்று
தலைப்புகளை வைத்தாலே போதும்
அவை அரண்டு ஓடிவிடும்.
கதைக்குள் காமெடியை நுழைத்து
சிரிக்க வைத்திருக்கும்
புது முக இயக்குநருக்கு (ஐக்)
ஒரு கிரீடம் சூட்டலாம்.
மாமூல் நடிகர்கள் மாமூல் நடிப்பு.
ஆனால் ராதாரவி தனித்து நிற்கிறார்.
பேய்களுக்கு எல்லாம் பயப்படாத‌
அந்த முகத்தில்
பீதியை எதிர்பார்க்க முடியாது.
இருப்பினும் படம்
பேய்க்கு பயப்படுவது எப்படி?
அதைப் பார்த்து சிரிப்பது எப்படி?
என்று இங்கே
பேயே பாடம் எடுப்பது போல் இருக்கிறது.
ஒரு குடும்ப மசாலாவுக்குள்
கதையை புரட்டி
பஜ்ஜி சொஜ்ஜி போட்டாற்போல்
உள்ள கதையில்
பேயின் புகை மூட்டம்
நன்றாகவே கண்ணாமூச்சி ஆடுகிறது.
ஸ்ரீதிவ்யா..ஜீவா ஜோடியின் காதல் காட்சிகள்
"ரோபோக்கள்"செய்யும்
காதல் காட்சிகள் போல் இருந்தன.
மயில்சாமி கோவை சரளா தேவதர்ஷிணி
இவர்களின் காமெடி அலுக்கவில்லை.
சூரி கலகலக்க வைக்கிறார்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
படத்தில்
முக்கிய கதை வசனமே
"அண்டா காகஸம் அபு காகஸம்
திறந்திடு சீசேம்"என்பது தான்.
இந்த "சங்கிலி புங்கிலி.."என்பதில்
எந்த ஒரு "கிலியும்" இல்லை.
சிரித்து தொலைக்கலாம்
என்று நீங்கள் விரும்பினால்
இந்த படத்தை
பார்த்து தொலைக்கலாம்.
====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக