"பிரிச்சு மேய்வோம்" கணிதத்தை.
=============================================ருத்ரா இ பரமசிவன்.
ஜெ.இ.லிட்டில் வுட் என்பவர்.கணிதத்தில் பெரிய மேதை.அவர் ஒரு முழுமை இயங்கியம் (என்டைர் ஃபங்ஷன்) பற்றிய ஒரு கணித விளக்கம் தருகிறார். அது உண்மையில் மிக மிக சுவாரஸ்யமான ஒரு கணித விளக்கம்.வீஸ்ட்ராஸ் சிக்மா இயங்கியம் என்பதை கணித மொழியில் "பிரிச்சு மேய்ஞ்சு"விடும் ஒரு அற்புத அறிவு இயக்க ஓட்டமே அது என்கின்றனர் .அந்த சிந்தனை இயக்கம் "ஏறணம் அல்லது இறக்கணம்" எனும் லாஜிக் விஞ்ஞானத்தை
அழகிய தேற்றங்களாக பியூடிஃபுல் தியரம்ஸ்) நமக்குத் தருகின்றது .
ஒரு கணித மதிப்பிடலை முழுமைப்படுத்துவது என்பது எல்லாவற்றையும் "அடக்கிய விஸ்வரூபத்தை"காட்டுவது ஆகும்.கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு காட்டியது இன்று வரைக்கும் யாருக்கும் புரிந்ததாய் தெரியவில்லை.அது கடவுளை தேடும் வழி என்று சொன்னாலும் அதற்குள்
வில்லும் அம்பும் மனிதமந்தைகளும் ரத்தமும் சடலங்களும் உயிரும் கலந்த ஒரு சமன்பாட்டில் சமன்பாடற்ற வானங்களும் நட்சத்திரங்களும் இன்னும் என்னவெல்லாமோ கலப்படம் பெற்று ஒரு "கனவுக்குழம்பாக" இருப்பதை நாம் அறிகிறோம்.
இது தான் முழுமை பெற்றது என திட்டவட்டமாய் குறிப்பிட இயலாதபோது
அது ஒரு "பரவலான"(ரேண்டம்) தன்மையை கொண்டிருக்கிறது.இப்படி கணக்கீட்டை "தொட்டும் தொடாமலும் "(ஆசிம்ப்டோட்டிக் ) ஒரு முழுமையை அது சொல்கிறதாயிருந்தால் அது கணித உலகில் "சிக்மா"இயங்கியம் என அழைக்கப்படுகிறது.
பெயர்களைக்கண்டு பயந்து விடவேண்டாம்..
முழுமை இயங்கியங்கள் கீழ்க்கண்டவாறும் அழைக்கப்படுகின்றன.
(1) ஃப்ரெஸ்னல் தொகுவியங்கள் (இன்டெக்ரல்ஸ்)
(2) ஜேகோபி தீட்டா இயங்கியம்.
(3) தலைகீழான(ரெசிப்ரோகல்) காமா இயங்கியங்கள்
(4) மிட்டாக் லெஃ ப்லர் இயங்கியம்
இவை சுவாரஸ்யமான காடுகள் தான்.கணித சிந்தனை எனும் "டார்ச்" ஏந்தினால் நாம் இங்கிருந்தே எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
பிரபஞ்சத்தில் ஒரு ஜன்னல் செய்து அந்த பக்கத்து வீட்டு (அண்டைய பிரபஞ்சங்களையும் ) நோட்டம் விடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக