Eyes on Cassini
சனிப்பார்வை
==========================================ருத்ரா
சனிப்பார்வைக்கு பயந்து திருநள்ளாறு கோவில் போய் கருநீலத்துண்டு வாங்கிக்கொடுத்து அர்ச்சனை செய்ய அலைமோதும் மக்களே !
அந்த நாசாவின் "கேசினியை " பாருங்கள்." சனியையே முறைத்துப்பார்த்து நிமிடத்துக்கு நிமிடம் அதன் "லக்கினத்தையே" படம் பிடிக்கும் மனிதனின்
அறிவு எங்கோ ஒரு உயரத்துக்கு போய்விட்டது.நீங்கள் ஏன் இன்னும் சனி பகவான் என்றொரு "அச்சத்தின்" வடிவத்துக்கு அடி பணிய வேண்டும்.?
கடவுளை வேண்டாம் என்று சொல்லத்தேவையில்லை. ஜாலியாக பாக்கெட்டில் படம் வைத்துக்கொள்ளுவது போல் அந்த கருத்தை வைத்துக்கொள்ளுங்கள்.ஆம் அந்த உயிரற்ற படத்துக்கு நீங்கள் உங்களையே அடகு வைத்துக்கொள்ள தேவையில்லை. மத வாதிகள் அப்படித்தான் உங்களை மழுங்கடித்துக்கொண்டு தேர்தல் காலங்களில் உடுக்கையடிக்கிறார்கள். அப்புறம் பாம்பும் பல்லியும் பசுவும் பன்றியும் உங்களை சிலைகளாக சூழ்ந்து கொள்ளும்.அதற்கு கற்பூரம் காட்டியே உங்கள் வாழ்க்கை யெல்லாம் கரைந்து விடும்.
எனவே இனி மனிதன் அறிவால் பிரபஞ்சத்தையே ஒரு "போன்சாய்" மரம் ஆக்கி வீட்டில் வைத்து அழகு பார்க்கப்போகிறான்.ஏழரை எட்டரை என்று நீங்கள் குலை நடுங்கவேண்டாம்.ராசி பலன் சொல்வதாய் எல்லா டி .வி களும் உங்கள் மூடத்தனத்தின் தலையில் மிளகாய் அரைத்து கல்லா கட்ட விடலாமா? கீழே உள்ள இந்த சுட்டியை தட்டி "அந்த சனியின்"பல்லைத்தட்டி
அதன் கையில் கொடுத்து விடுங்கள்.
https://saturn.jpl.nasa.gov/mission/saturn-tour/where-is-cassini-now/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக