தேவனும் குமாரனும்...
கட்டளை..தண்டனை
என்று தானே
சொல்லிக்கொடுத்தேன்.
நீயோ
மண்ணையே மனிதனைக்கொண்டு
வெளிச்சமாக்கினாய்.
மன்னிப்பு எனும்
மத்தாப்புக்கொளுத்தி
இந்த மரண இருட்டையே
பிர்காசமாய் பூக்கச்செய்தாய்.
குமாரனே பிதாவாகினான்
எனும் விந்தை புரியவா
உன்னை இந்த மாட்டுக்கொட்டிலுக்கு
அனுப்பினேன்.
உன்னையே பலி கொடுக்க எண்ணிவிட்டாய்.
இதோ சூட்டிக்கொள் என்று
முட்கிரீடம் தந்து விட்டு
முடங்கிக்கொண்டான் தேவபிதா!
மனித மைந்தனோ
அன்பினால் இந்த பிரபஞ்சம் முழுதும்
ஒளி முகம் காட்டி
சிலிர்க்கச்செய்தான்.
______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக