வியாழன், 4 டிசம்பர், 2025

அகழ்நானூறு 108

 

அகழ்நானூறு 108

___________________________________________


மாறோக்கம் எனும் ஊரின் பெண்பாற்புலவர்

"நப்பசலையார்" இறை நெகிழ் மணி வளை

மென் நோய்ப் பூவின் பசலை படர் தரும்

காதல் அரும்பிய கனல் நீவு மிடல் சாய

அடு துயர்க்காலையும் நுண்ணிதின் நுண்ணிய‌

நுவல் நுரையன்ன பாடிக்காட்டுவார் மன்.

அஃதெனவே வீடும் நாடும் வளம் குன்ற‌

கெடுநர் நசையின் செறுப்படு தொலையும்.

மாநிலத்து மதிநிறை பெண்ணாள் அன்ன‌

நுடங்கு நோயின் வறியதோர் பசலை

புக்க நெடும்புலம் போல் நிரம்பா நீளிடை

யாறு பொரிய அகலக்கிடந்து ஆங்கே

"கல்கண் பொடியக் கானம் வெம்ப"

மடிந்தக்கண் கருவி வானம் அடைமழை தூஉய்

கலி பூத்தன்ன வளம் பல பெருக்க‌

கொல் பகை கொல்லும் நிழற்குடை யாத்து

நிமிர் தேர் அண்ணல் உருகெழு செயிர்க்கும்.

அவ்வண் ஆங்கோர் செம்மண் பசலை

செல்லிடப்பாங்கும் செம்மையுறவே

பாடும் பரவையார் மீமிசைப் பண்ணே.

___________________________________________

சொற்கீரன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக