செவ்வாய், 9 டிசம்பர், 2025

வண்ண(த் தூரிகை)தாசன்!

 வண்ண(த் தூரிகை)தாசன்!

___________________________________


தமிழனா?

கொக்கா?

ஒரு முகத்தை

ஆறு முகமாக்கி

நூறுமுகமாக்கி

அங்கு துறைமுகம் செதுக்கி

கப்பல்கள்

விடுபவன் ஆயிற்றே!

"வண்ண(த்தூரிகை) தாசனுக்கு"

சிலிர்க்கின்ற மயிர்த்துளியில்

கூட‌

சிந்திக்கும் பிக்காசோக்கள்

கோடுகள் இடும் காடுகளில்

எத்தனை எத்தனை முகங்கள்?

எழுத்துக்களைப் பிதுக்கினாலும்

வண்ணக்குப்பிகளின்

லாவாக்கள் தான்.

அவர் கற்பனையில்

ஆவி பறக்கச் சுடும்

பனிக்கட்டியில்

எட்டுத்தொகை மாளிகைகளின்

கதகதப்புத் தமிழில்

சங்கம் ஒலிக்கும்.

தருணங்களின் குபுக்கென்ற‌

குமிழி முகத்திலும்

யுகப்பிரளயங்களின்

சிந்தனையாறுகள்

அத்தனையிலும் 

கவிதைப்பூக்களின்

சிந்து பூந்துறைகள்.

_________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக