வியாழன், 11 டிசம்பர், 2025

அழகாய்ச்சொன்னீர்கள் வண்ணதாசன் அவர்களே

 

ஸ்டோரிகள்



பொது உடன் பகிர்ந்தது
அழகாய்ச்சொன்னீர்கள்
வண்ணதாசன் அவர்களே
_____________________________________________
அழகாய்ச்சொன்னீர்கள்
வண்ணதாசன் அவர்களே
இரவல் மூச்சு என்று.
இந்த மனிதனைக் கட்டி ஆள‌
ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளாய்
அவன் படும் பாடு
கொஞ்சநஞ்சமல்ல.
அவனை வைத்தே
"தன்னைப்பற்றி" எழுதி
புல்லரித்துக்கொண்ட வரிகளும்
ஆயிரக்கணக்கில் தான்.
எத்தனை தடவைதான்
கீழே குதித்து
அவதாரம் செய்தாலும்
தான் படைத்த அந்த‌
ஹ்யூமனாய்டுகளுக்கு
அங்கங்கே சில‌
ஸ்க்ரூக்கள் முடுக்கி சரி செய்ய‌
வந்ததாய்
எத்தனை கும்பாபிஷேகங்கள்?
கும்பமேளாக்கள்?
அவனும்
ஓய்ந்து தான் போனான்.
ஒரு நாள் அவன் தன்
கங்கை சூடிய தலையை
தடவிப்பார்த்து
திடுக்கிட்டுத்தான் போனான்.
எப்படி
அவ்வளவு அதி நுட்பமான தன் மூளை
களவு போனது?
அதிலிருந்தே அவன் நுரையீரலும்
தாறு மாறு தான்.
பேச்சு வார்த்தை நடக்கிறது.
மனிதனின் "ஏ ஐ"யை
திருப்பித்தரச்சொல்லி.
"திருப்பித்தரவா?
நீயே
என்னுடைய "ஆர்கனாய்டு" தானே?"
என்றான் மனிதன்.
"அப்படியா?"
அப்போது மூச்சு இழந்தவன் தான்.
இன்னும் அவனருகே
நவீன சிவ லிங்கங்களாய்
"ஆயிரம் ஆயிரம்
ஆக்சிஜன் சிலிண்டர்கள்!"
__________________________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக