தமிழனின்
குறுக்குவெட்டுத்தோற்றம்
திருநெல்வேலி.
திருநெல்வேலியின்
குறுக்கு வெட்டுத்தோற்றம்
அந்த அழகிய
குறுக்குத்துறை தான்.
பொருனைப்பெண்ணவள்
அங்கே வந்து
தன் இடுப்பை வளைத்து
இதயம் சிலிர்க்க
சிலுப்பி நின்றவள்
சடக்கென்று தன்
குறுக்கு ஒடிந்தது போல்
அமர்ந்து கொண்டாளே.
அவளின் அந்த எழில் கொஞ்சும்
நீர்ச்சுழிப்புகளும் நெளிப்புகளும்
எத்தனை ஆயிரம்
பளிங்குக்கவிதைகள்?
அங்கிருந்து சிந்துபூந்துறையின்
தண்ணீர்ச்சிலம்புகள்
அங்கிருந்து சிந்துபூந்துறையின்
தண்ணீர்ச்சிலம்புகள்
பரல்கள் தெறித்து ஒலிப்பது
குறுக்குத்துறைக்கும் கேட்குமே.
துணி துவைக்கும் கல்லே
சங்கப்பலகையாய்
அந்த கலித்தொகையை
ஒலிப்பிஞ்சுளில்
ஒலி பரப்பிக் களி பரப்புமே.
_________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக