திங்கள், 8 டிசம்பர், 2025

ஏக்கக்குரல்

 

ஏக்கக்குரல்
__________________________________
எங்களை நீங்கள் ஏன்
அரசியல் படுத்தவில்லை?
இளைய தலைமுறையின்
ஏக்கக்குரல்
பழைய தலைமுறையினரை
நோக்கி ஒலிக்கிறது.
உண்மை தான்.
ஏன் இந்த தொய்வு?
பழைய தலைமுறையினர்
இன்னும் பழைய பத்தாம் பசலி
ஆனதே இதன் காரணம்.
அந்தக்காலத்திலே
என்று
பாயை விரித்துக்கொட்டாவி
விட்டுக்கொண்டே
நிறைவேறாத நோஸ்டால்ஜிக் கனவுகளை
அசை போட ஆரம்பித்து விடுவார்கள்.
அந்த தலைமுறை இடைவெளிதான்
பி ஹெச் டி மாணவனையும்
அந்த "நெரிசல் காட்டுக்குள்"
கொண்டு தள்ளியது.
அவன் சீறுவது நியாயமே.
அவனது ஆவேசம் சரியானது தான்.
இதெல்லாம்
சகஜமப்பா
என்று வெற்றிலை பாக்கு
குதப்பிக்கொண்டிருப்பதில்
எந்த விடியலும் தலை நீட்டாது.
கணினி யுகம் என்று
இந்த பூச்சி புழுக்கள் கூட‌
புரிந்து கொண்டிருக்கிறது.
குவாண்டக் கணிதம்
நம் மூளைக்கபாலத்தையும்
அசைத்துப்பார்க்கின்றது.
பழைய நூற்றாண்டுகளையும்
க்யூபிட் துண்டுகளாக்கி
சோழிகுலுக்கும் விளையாட்டுகளில்
மனிதன் மூழ்கிப்போனான் என்பது
ஒரு கெட்டியான உண்மை.
இதை தரிசனம் செய்ய வில்லையென்றால்
உதிக்கின்ற சூரியன் கூட‌
நரைத்துப்போன வெளிச்சங்களைத்தான்
உமிழ்ந்து கொண்டிருக்கும்.
விஜய் என்பது
ஒரு கொப்பளிக்க வேண்டிய‌
லாவா தான்.
அது அந்த "வெஸ்டட் இன்டெரஸ்ட்"
படுகுழியில்
விழ விட விட்டது ஏன்?
பழமை நெருப்பின் தினவுகளே
யோசிக்கத்துவங்குங்கள்.
__________________________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக