சனி, 6 டிசம்பர், 2025

அகழ்நானூறு 111

 அகழ்நானூறு 111

____________________________________________


பெருங்காஞ்சி என்றொரு துறை உண்டு.

குருதிக்கடல் ஊழ்த்து நிலம் பெருக்கி 

வரை அகல குடை பரப்பி கோன்மை நீட‌

குறி கொள்ளும் மறம் பரப்பி யாது ஈண்டு

விளையும் கொல்?உயிர் தின்ற உயிர் செலினே

எற்று மன் இசை படும் அன்பின் வழியது யாது?

சிறுவெண்டேரையார் சில் பூங்கல்லென்று

செவி மடல் நிரப்ப மயிர்க்கண் முரசம் 

அதிர்வுழி உயிர்ப்பலி எண்ணில் அடங்கா

வெறியில் தீய்ப்பது அறம் கொட்பு ஆமோ?

என்றே பகர் தருகின்றார் சொல்லிய பரப்பி.

துஞ்சுமுன் துணியுமின்.காடுறை ஓலமும்

கவிகை பெய்தரு நன்பொருள் ஓதமும்

கேண்மின் ஈண்டு.மன்னுதல் ஒன்றே மன்

ஆகுமென்ப ஓர்ந்தோர் ஒண்ணுதல் தெளிந்தே.

வெள் வெண் என்பு கவ்விய காக்கை

கடுங்குரல் முரல கூகையொடு ஆர‌

நள்ளிய காடும் நடுங்கு சுரன் கூடும்

ஒலிக்கும் அணங்கின் பேய் ஒலி கேண்மின்.

_________________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக