வியாழன், 4 டிசம்பர், 2025

அகழ்நானூறு 109

 

அகழ்நானூறு  109

_____________________________________________



காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணன்

பாடிய "மகட்பாற்காஞ்சி"கேண்மின் கேண்மின்.

தொல்குடி மன்னன் தன் துளிர்ப் பெண்ணை

பொதியப் போர்த்து வளர்த்த காலை 

முதுவேந்தர் மூவரும் செறு முறுக்கி ஆங்கே

குருதி ஆற்ற போர் மேவி நிற்பர்.

பல்காசு பொலம் செறி அல்குல் அணியாள்

எழில் தீ வார்த்து ஆடு கழை அடுக்கம் 

பொன்ம் ஒரு பால் ஓங்கல் தோறும்

எல்லே முறுவல் தூஉய் தூஉய் நிற்பாள்.

"நாள்கடா அழித்த நனந்தலைக்குப்பை"

வளத்தான் நின்ற வல்வில் வேந்தன்

திமிர்த்த வனப்பே மணிவளை விழியாள்.

தன்னையே சிதைத்து வீழ்த்தி வேல் குருதி 

நனைப்பத் தரும் தன்னைமாரே தருக்கி நிற்பர்.

கல்பொரு சிறுநுரை ஓவு கண்டன்ன காதல்

ததைய நூறி பிணம் தின்னும் பேய்மலி

காட்சியே ஆங்கு மகட்பாற்காஞ்சி.

பண்டும் இன்றும் கொலைமறம் படுத்து

வரித்த வரித்த கொடுஞ்சுவடி கேண்மின்.

நுதிவாய் எஃகமொடு நுவல்தரு செய்தி

உரைப்ப ஒரு குறி கேட்பீர் கொட்புடன்.

ஆர்த்த பூங்கலி அவிர் மடல் காதல்

அவிழ்தரு போதிலும் நிணம் நாறு ஒலியே

ஒல்லும் ஒல்லும் ஒல்லா நெறிப்படும்.

_____________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக