செவ்வாய், 23 டிசம்பர், 2025

பாலச்சந்தர்

 பாலச்சந்தர்

_________________________________
திரைப்பட இயக்கம்
காமிரா விழியில்
இலக்கியத்தின்
வழியை செதுக்குவது ஆகும்.
கச்சா பிலிமில்
மனிதர்களின் கச்சா நிறங்களை
தோய்த்துக்காட்டுவது அல்லவா.
அப்படி தோலுரித்து அவர் தந்தது
எல்லாம்
கடவுளின் நிர்வாணங்கள் தான்.
கொச்சை ஆபாசம் என்று
முகஞ்சுழிக்கும் சுப்புடு முசுடுகள் கூட‌
தங்கள் தனிமையான தனிமையின்
திரைக்குள்ளே
அவற்றை ஓட்டிப்பார்த்து
கிரேட் என்று
மெய்சிலிர்த்துக்கொண்டிருப்பார்கள்.
எத்தனை படங்கள்?
"அரங்கேற்றம்" ஒன்று போதும்.
வாழ்க்கையை முழுவதுமாய்
பரிசோதனைக்கூடம் ஆக்கியே
வாழ்ந்து பார்த்தவராய்த்தான்
பாலச்சந்தர் அவர்கள்
அந்த செல்லுலோஸ்களில் சுருண்டுகிடக்கும்
தன் நாவலுக்கு
"முற்றும்" போட்டிருப்பாரோ?
அந்த முற்றும் கூட அவர் கோணத்தில்
ஒரு அறக்கலகமே.
அவர் போன்ற
சிந்தனைக்கொளுந்துவிட்டு
எரியும்
இரத்தமும் சதையும் ஆன‌
காமிரா அறிவு ஜீவிகளுக்கு
முடிவு என்பது
சுவாரஸ்யமே இல்லாதது தான்.
அந்த படைப்பாளியை
நாம்
"தொடரும்" என்று
போட்டு படித்துக்கொண்டே
இருப்பதே
ஒரு சுவாரஸ்யமான திரைப்படம்.
_______________________________________________
சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக