அம்மாச்சி வீட்டில் ஒரு நிலைக் கண்ணாடி...
என்று
திரு வண்ணதாசன் அவர்கள்
ஒரு கவிதையை ஆரம்பித்திருந்தார்.
ஆங்கிலத்து "ஹேலுசினேஷன்"ஐ
தன் மன எழுச்சியின் அழகியல் ஆழத்தின்
கனபரிமாணத்தோடு
தீட்டியிருந்த அவரது அந்தக்கவிதையை
அந்த கண்ணாடிக்குவியத்தில்
நானும் ஒரு குருவி அலகாக
கூர் தீட்டி உற்றுக்கவனித்தேன்.
அடுத்த சில வினாடிகளில்
தூள் தூளாய் சிதறிக்கிடந்ததன.
அந்த மனவெளித்துண்டுகள்
யாருடையவை?
எதனுடையவை?
அந்த பிம்பத்தின் பிஞ்சுகளில்
அம்மாச்சி அழகாக
சிரித்துக்கொண்டிருந்தாள்...
அவை கண்ணீர்த்துளிகளின்
பளிங்குப்பிரளயங்களாக
இருந்த போதும்...
____________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக