புதன், 20 நவம்பர், 2024

நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே

___________________________________________


நண்பனே நண்பனே

யாரைக்கூப்பிட்டேன்

தெரியவில்லை.

என்ன இப்படிச்சொல்லுகிறாய்

உன்னெதிரில்

நெட்டைப்பனைமரம் போல்

நின்று கொண்டிருக்கிறேனே

தெரிய வில்லையா?

சரி..

நெட்டையாகவா?

அண்ணாந்து தான் பார்ப்போமே

என்று பார்க்கிறேன்.

அய்யய்யோ.

உயரே மின் கம்பியில்

ஒரு காக்காய் அடி பட்டு 

தொங்கிக்கொண்டிருக்கிறது.

அதற்குள்

கா கா கா கா...கா...கா

என்ற ஒலி மழை

செவியெல்லாம்

சல்லடை ஆகி விட்டது.

இமயம் சரிந்தது..

வானம் வீழ்ந்தது...

என்று அச்சடிக்கப்பட்ட‌

கருப்பு மையின் 

சொரித்தனங்கள்

எதுவும் இல்லாமல்

கருப்பின் கண்ணீர்க்கடல்

அஞ்சலி போஸ்டராய்

விம்மிப்பரந்து நின்றது.

அந்தக்கம்பியில்

தொங்கிக்கொண்டிருந்தது

நானா?

நண்பனா?

சடக் என்று 

ஒரு முறிவு சத்தம் எழுப்பியது.

மன முறிவு என்று

நான் படுக்கையில்.

மருத்துவர் ஏதோ

கிறுக்கினார் காகிதத்தில்.

கிறுக்கு 

யாருக்கு

அந்த காகிதத்துக்கா? பேனாவுக்கா?


______________________________________________________

சொற்கீரன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக