ஆழ்நிலை...
______________________________
.
வானம் வெளுத்துவிட்டது.
ஆம்
அதன் சாயம் வெளுத்து விட்டது.
விடிகிற மாதிரி விடிவதும்
மேற்கில் போய் விழுகிற மாதிரி
விழுவதும்
அதெல்லாம் வெற்று வாடிக்கை
ஆகி விட்டது.
இப்படி இருட்டையும் வெளிச்சத்தையும்
அள்ளிப்பூசிக்கொண்டு
அது என்ன சொல்ல வருகிறது?
நான் ஒன்றும் சொல்ல வரவில்லையடா
நான் அவ்வப்போது ஆடை மாற்றி
வீசிஎறிவதை ஏண்டா
உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?
இங்கே எல்லாமே
வீசி எறியப்பட்ட குப்பைகள்.
உங்கள் கடவுள்களையும் சேர்த்து தான்
சொல்கிறேன்.
உங்கள் மண்டைப்புழுக்கள்
செய்கிற வேலை அது.
அதன் குடைச்சலும்
அதன் குதியாட்டங்களும்
உங்களை இப்படி
குத்தாட்டங்கள் போட வைக்கிறது.
மொத்தப்பிரபஞ்சமே
எவனோ
எதுவோ
காறி உமிழ்ந்தது தான்.
ஒளியும் இருளுமாய்
அவையே
ரத்தமும் சத்தமுமாய்
....
என்னவோ சொல்லிக்கொண்டே
போனது.
நீ வேறு நான் வேறு இல்லை.
இது என்ன?
இது எதற்கு?
இது எப்படி?
இன்னும் அந்தக்குரல்
அடுக்கிக்கொண்டே போகிறது.
...
.........
போதும் இன்றைக்கு.
யோகா என்கிற அந்த
பிராந்தி பாட்டில் கடைசிச்சொட்டையும்
கவிழ்த்து விட்டது.
இனி அப்புறம் பார்ப்போம்.
__________________________________________
கல்லாடன்
10.11.2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக