வெள்ளி, 15 நவம்பர், 2024

குடைக்குள் மழைபெய்ய‌...



குடைக்குள் மழைபெய்ய‌

______________________________________


குடைக்குள் மழைபெய்ய‌

குடை கந்தலாக 

இருக்க வேண்டியதில்லை.

மனம் கந்தலாகி விடாமல்

கொஞ்சம் துளி காதல் போதும்.

உங்கள் தமிழ்க் காதல் 

எனும் கற்பனைச் சுரங்கம்

எல்லையைக் கண்டதில்லை.

சொற்பஞ்சம் என்றும் இல்லை.

ஆயிரம் மழை கொட்டும்

சொல் மேகங்கள்

உங்கள் மீது அல்லவா

கவிந்து கொண்டேயிருக்கின்றன.

மழைத்துளிக்குள்

உங்கள் சொற்கள்

தூவாத சூரியன்கள் இல்லை.

வளைக்காத வில்லுமில்லை

வண்ணங்கள் ஏழு

விஞ்ஞானிகளுக்குத் தான்.

சொல் ஞானி அல்லவா நீ.

வண்ணக்குழம்பில் சொல்லெடுத்து

வானத்துக்கே குடை பிடிப்பாய்.

விசும்பின் ஒரு வியர்வைத் துளியில்

எத்தனை உலகங்கள் ஆக்கித்

தருகின்றாய்!

செல்லத்தின் செல்லமான‌

உன் உவமைப் பொமரேனியன்கள்

எப்போதும் உன் காலடியில்!


____________________________________________

சொற்கீரன்

(14.11.24ல்  ஈரோடு தமிழன்பன் மழைத்துளி பற்றி 

எழுதிய கவிதையில் நனைந்து எழு தியது இது.)






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக