புதன், 20 நவம்பர், 2024

முகம் மட்டும்....

 

பெண்ணே!

உன் முகவரியை 

முகத்தில் தேடினால்

அது

உன் முத்துப்பல் 

சிரிப்பைக்காட்டியது.

முத்துக்களின் அருவியில்

தேடினால்

அதோ இரு கருவண்டுகள் 

என்று காட்டியது.

அந்த இமைச்சிறகுகளில்

இமய மலையின்

பனிச்சறுக்கு

எங்கோ இழுத்துக்கொண்டு

போகிறது.

அப்புறம் எங்கே போனேன்

என்று தெரியவே இல்லை.

சிரிப்பின் 

க்ளுக் ஒலிகள்

சோழிகளை குலுக்கிக்கொண்டே

இருக்கின்றன.

பெண்ணே

மீண்டும் கேட்கிறேன்

உன் முகவரி தான் எது?

"மூனு"க்கு வாருங்கள்.

ஓகோ!

அந்த வட்ட நிலா தானே.

இதோ வருகிறேன்.

அசையாமல் 

அலுங்காமல் குலுங்காமல்

எப்படிச் சிரித்துக்கொண்டே

உறைந்து கோண்டே என்னை

உறைய 

வைத்துக்கொண்டே இருக்கிறாய்

வட்ட நிலாவாய

"தொப்"

என்ன இது?

அந்த பளிங்கு முகம் 

சில்லு சில்லாய்..

வளைந்து நெளிந்து

ஆடி குலுங்கி..

ஒரு கண்ணாடிப்பரப்பு போல்

இருந்த‌

தடாகத்தில் 

தடுமாறி விழுந்தேன்.

அப்புறம் 

நான் நான் இல்லை.

அவள் நினைவின் உருவு

மீண்டும்

ஜிகினா விழுதுகளாய்

என்னைச்சுற்றி

அலைகளாய் சுருண்டு கொண்டது.

உன் முகத்தின் முகவரி வேண்டாம்.

முகம் மட்டும் காட்டு...


__________________________________________

சொற்கீரன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக