வியாழன், 21 நவம்பர், 2024

"அன்புமனம் கனிந்தபின்னே.."

 

old movie tamil aalukkoru veedu  .............(link)


"அன்புமனம் கனிந்தபின்னே.."

ஆளுக்கொரு வீடு (1960)

_____________________________________________________


இது பாட்டா?

பட்டாம்பூச்சிகள் கொத்து கொத்துகளாய்

என் முகத்தை மொய்த்தது போல்

ஒரு மயக்கத்தை ஏற்படுத்துகின்ற பாடல்.

பதினெட்டாவது படியில்(வயது)

நின்று கோண்டு

என் ஊஞ்சல் கயிற்றை அந்த‌

வானத்தை நோக்கி

எக்கி எக்கி வீசி

தொங்கவிட்டு ஒரு ஏக்கத்தின் 

உச்சிமுனையைத்தொடும்

ஊஞ்சல் ஆட்டத்தின்

கனவுப்பாடல் இது.

பி பி எஸ் ..சுசீலா இணைந்து

பாடியது.

பாட்டின் காட்சிக்கேற்ற வாறு

ஒரு மாலைச்சூரியன் 

சன்னல் வழியாய் 

தங்க முலாம் பூசியதில்

ஏதோ ஒரு மஞ்சள் ஆற்றில்

மூழ்கி மூழ்கி நீந்திக்களித்தது போல்

உணர்வு.

எனது ஊர் கல்லிடைக்குறிச்சி.

இதை தழுவிக்கொண்டு ஓடும்

தாமிரபரணியில் 

இந்த பாட்டுடன் 

நான் குமிழியிட்டு குமிழியிட்டு

குளித்த போது

பாட்டின் ராகம் என்னுள்

புது புது ரத்தத்தை தங்கமாய்

காய்ச்சி உருக்கி இழைத்து...

ஆற்றில் கரைந்து போனதாய்

ஒரு உணர்வு.

இந்தப்பாட்டைக்கேட்டு

காலப்பயணத்தை

பின்னோக்கித் தொடருங்கள்..

புரியும்...

அந்த இசைக்குமிழி வீட்டுக்குள்

நீங்கள் நுழைந்து கொண்டிருப்பது..


_______________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக