விழித்துக்கொள்ளுங்கள்.
________________________________________
சொற்கீரன்
8 லட்சமா? 5 லட்சமா?
ஜனநாயகக் கடலின் பிஞ்சுகள்
சங்கமம் ஆனது
அரசியல்
சரித்திர ஏடுகளில்
சல சலக்குமா?
தெரியவில்லை.
கட் அவுட்டுகள் நிமிர்ந்து சொன்ன
வெளிச்சங்களில்
புதிய விடியல் தோன்றுமா?
சாதி மத தோட்டாக்களைக்கொண்டு
செய்த
துப்பாக்கிக்கண்கள் வழியே
மக்களை உற்றுநோக்கும்
நுட்ப அதிகார வீச்சில்
மக்களின்
சிந்தனை நாற்றுகளின் பயிர்கள்
எழுமா? இல்லை விழுமா?
பொம்மலாட்டங்களின் நிழல்களிலா
புதிய உலகம் கண் விழிக்கும்?
பாயசத்தோடு ஃபாசிசம்
ஒப்புமைப்படுத்தியதில்
நமக்கு ஒன்று புரிகிறது.
இனி அவர்களின் கட் அவுட்டுகள்
ஹிட்லர் முசோலினிகளுக்குத் தான்.
விழிப்புடன் இருங்கள் மக்களே!
உங்கள் கண்களை விற்று
ஒரு விடியலின்
கனவுக் குமிழிகளை வாங்கிவிடும்
ஒரு வர்த்தகத்தின்
விளம்பரம் உங்கள் மீது
எச்சம் இடும் அவலங்களை
எதிர் கொள்ளப்போகிறீர்கள்.
விழித்துக்கொள்ளுங்கள் மக்களே!
விழித்துக்கொள்ளுங்கள்.
______________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக