ஈரோடு தமிழன்பன் கவிதைகள்
_________________________________________
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் பற்றி கவிதைகள்
________________________________________________________
வானத்தோடு
பேசவேண்டுமென்றால்
இந்த "மேகங்களை"
நம் உதடுகள் ஆக்கி
"டப்பிங்"
கொடுக்கச்
சொல்லவேன்டும்!
வரிசையாய்
உவமைகளைக்கொண்டு
அற்புதமான
தோரணவாயில்
அமைத்துள்ளீர்கள்!
தமிழ் கொண்டு கட்டிய
அரண்மனை இது.
அழகு மனையும் இது.
இந்த உலகத்தையே
தன் "வேர்வைத்தொகுப்பு" வெளியிட்டு
படைத்தவன் அல்லவா
மனிதன்.
இதைச்சொல்லிய
உங்கள் பேனாவுக்கு
இதுவே
ஒரு வைரக்கிரீடம்!
_____________________________________
சொற்கீரன்
வானத்தோடு
பேசவிரும்பினால் யாருக்கும்
உயரங்களின் உதவி
கிடைக்கவேண்டும்.
உயரம்
உடம்பில் இருக்கவேண்டுமெனும்
கட்டாயம் இல்லை
உடுக்களோடு
உரையாட வேண்டுமெனில்
யாருக்கும்
வெளிச்ச மொழியில்
தேர்ச்சி தேவை.
சூரியப்பல்கலையில்
படித்துப்
பட்டம்பெற்றிருக்க வேண்டுமெனும்
கட்டாயம் இல்லை.
சூரியப்பல்கலை இணைவுபெற்ற
அகல்விளக்கோடோ
மெழுகுதிரியோடோ
தொடக்கக் கல்விபெற்றதற்கான
சான்றிதழ் இருந்தால்கூடப்போதும்.
முன்னேற்றங்கள் வைத்திருக்கும்
முகவரிப் புத்தகத்தில்
ஒருவர் பெயர்
இடம்பெற வேண்டுமெனில்
அவரின் சோதிடச்
சாதகக் கட்டங்களின் ஆதரவு
கட்டாயம் தேவையில்லை.
வேர்வைத்த கபால விளைச்சலின்
ஆதரவும்
வேர்வைத்தொகுப்பின்
ஆதரவும் இருந்தால் போதும்.
.................................................
போதுமானவை-தலைப்பு
19-11-2024
காலை 7-50
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக