வெள்ளி, 1 நவம்பர், 2024

கவிதைகளின் பஃறுளி ஆறே!



கவிதைகளின் பஃறுளி ஆறே!

உங்கள் சொற்களின் ஊற்று

எங்கே உளது?

பொருளைத்தேடும் சொற்கள்

மீண்டும் புதுச்சொற்களாய்

ஊறும் தமிழின் 

உள் விசைச் சிமிழ் 

உங்களிடம் உண்டு போலும்!

தமிழ் என்றாலே

கோடி கோடி அண்டங்களை

அடக்கிய சிமிழ் அது எனக்

நீங்கள் கண்டு கொண்டதை

நாங்களும்

கண்டு கொண்டோம் 

கண்டு கொண்டோம்.

கடல்கள் வற்றும்போது

சொல்லி அனுப்புகின்றோம்

உங்கள் தமிழின் 

ஒரு துளிக்காக!

ஒரு துளிக்காக!

வானங்கள் வெறுமையுறும்போது

சொல்லி அனுப்புகின்றோம் உங்கள்

உவமைக்காக!

உவமைக்காக!

_______________________________________

சொற்கீரன்

(01.11,24 ல் ஈரோடு தமிழன்பனின் 

கவிதை பற்றிய கவிதை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக