மனிதர்களில்
மனித முகமூடி
மாட்டியவர்களே அதிகம்.
பிறக்கும்போது
கோட்டு உருவமாக இருந்த
மனிதனுக்கு
என்பு தோல் போர்த்தவனாக
ரத்த சதையுடன்
ஒரு உருவம் கிடைக்கிறது.
மனிதன் என்பவன் யார்?
அவன் சிந்தனைக்குள்
என்ன இருக்கிறது?
என்ன இருக்க வேண்டும்?
இந்த இரண்டு கோடுகள்
கிழிக்கப்படுகின்றன.
அவன் என்ன சிந்திக்க வேண்டும்
என்ற கோடு
இன்னும் வரையப்படாமலேயே
இருக்கிறது.
உன்னைப் பிறனில் நீ காண்.
மனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள்
என்று பெருகிய போது
கோடிக்கோடி கண்களும் காதும் வாயும்
இன்னும் முகமும் மூளையும்
ஒரே மனிதம்
என்று
சூரிய ஒளி எல்லாம்
உருப்பெருக்கி வழியே பாய்ந்து
பின்
ஒரு புள்ளியில் ஒடுங்குவது போல்
தெரியும்
அந்த ஒற்றைப் புள்ளியாய்
அந்த ஒரே மனிதம்
ஆகி விடும்போது
அதன் ஆற்றல் என்ன?
அதன் அறிவு என்ன?
அதன் இன்பம் துன்பம் எல்லாம்
ஒன்றே.
அந்தபுள்ளியை
அந்த புள்ளியாய் ஆகி நீ
ஓர்மை கொள்வாய் ஆகில்
அது என்ன?
ஓர்மை கொண்டவர்கள்
கடவுள் என்று சொன்னால்
அது கற்பனை.
அந்த புள்ளியில் அவர்கள்
இன்னும் ஒன்றவில்லை என்றே பொருள்.
ஒன்றுமில்லை இங்கே.
எல்லாமும் ஒரு புள்ளியாய்
நிறைந்து மகிழ்ச்சியாய்
இருப்பது மட்டுமே தெரிகிறது.
எல்லாரும் ஒன்றாய் இருப்பது மட்டுமே
புரிகிறது.
உலக நேயம் மனித நேயம் எல்லாம்
சமுதாயத்தில் சமநீதியோடு
அன்பு எனும் புள்ளியில் சேர்கிறது.
அது இல்லை என்றால்
மனிதன் வெறும்
"என்பு தோல்"தான் என்கிறார்
வள்ளுவர்.
.............
போச்சு போச்சு எல்லாம் போச்சு.
இந்த வர்ணத்தையெல்லாம்
அழித்து விட்டாயே...
இந்த பாவம் தோஷம்
எல்லாம் போகவேண்டும்
எல்லாவற்றையும் அழித்து விடு.
போதும் உன் தத்துவம்.
"தத்துவ(ம்)அஸி யைத்தானே
சொல்கிறேன்."
வர்ண சாஸ்திரம் இல்லாத உன்
தத்துவமஸியை அழித்து எறி
.......................
அர்த்தமுள்ள இந்து மதம்
என்று சொல்லிவிட்டு
அர்த்தமே இல்லாமல்
என்னவோ சொல்லிண்டிருக்கேளே!
_____________________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக