அந்த மகத்தான கவிஞன் முத்துக்குமார்
அப்புறம் ஒரு நகைச்சுவை மன்னன் அல்வா வாசு
இன்னும் வரிசையாய்..
என்ன கொடுமை?
இப்போது இந்த இளைய தலைமுறை
இயக்குநர் சுரேஷ் சங்கையா..
"ஒரு கிடாயின் கருணை மனு"
படத்தின் தலைப்பே
சிந்திக்கும் மனங்களில்
கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது...
ஒரு கலைப்படத்தின் சிகரம் தொட்ட
அந்த விளிம்பு இன்னும்
ஒரு விருது அதை ருசிக்கும் முன்னரே
விளம்பர வாசனைகளையும்
அது தொடும் முன்னரே
அவர் மறைந்து போன துயரம்
நம் நெஞ்சை அடைக்கிறது.
அது ஏன்
இந்த கல்லீரல்கள் எல்லாம்
கலைஞர்களுக்கு
கல்லறைத்தோட்டம் கட்டி
ஒப்பாரி வைக்க வருகின்றன.
கள் நெஞ்சன் எமன் கூடு கட்டும்
இடமா அது?
அந்த இளஞன் கனவுகள் எங்கள்
இமைகளின் மீதே
புதிய புதிய இமயங்களுக்கு
கால் கோள்கள் இட்டுக்கொள்ளட்டும்.
_________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக