சனி, 30 நவம்பர், 2024

ஒரு திகிலூட்டும் பரிணாமம் இது.

 

Nvidia’s $ 1 Trillion AI Pivot

பங்குகளின் மதிப்பு 21106 மடங்கு அதிகரிப்பை நோக்கி நடைபோடும் "என்வீடியா"கம்பெனி ஏ ஐ அறிவியல் உலகையே புரட்டி போட்டு விடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.இனி இந்த உலகம் கணினி மூளையின்உருண்டு திரண்ட ராட்சச கோளமாக மாறிவிடும்.பிரபஞ்ச அமைப்பையே இது மாற்றி விடும்.அறிவின் வளர்ச்சி ஒரு திகிலூட்டும்  பரிமாணத்தை நோக்கிய‌ பரிணாமம் இது.


How Nvidia Changed the Game | Watch

ஞாயிறு, 24 நவம்பர், 2024

உயிரின் உள்ளே ..



 உயிரின் உள்ளே "முன் உயிரிப்பொருள் "ஒன்று உண்டு.ப்ரோட்டீன் என்பதே அது.இந்த முன் உயிரிப்பொருள் டி என் ஏ மற்றும் ஆர் என் ஏ எனும் சங்கிலித்தொடர்களில் முறுக்கப்படுகிறது.அதன் நுண்ணிய கண்ணிகளே

இங்கு ஒரு வித இழைவிய குறியீடுகளை (கோட்ஸ் ஃபார் சிந்தசிஸ்) ஒரு கணித ஏற்பாட்டுடன் (மேதமெடிக்கல் அர்ரேஞ்ச்மெண்ட்) இயக்குகின்றன.

இந்த ஒளிப்படம்(வீடியோ) பாருங்கள்.........இ பரமசிவன்


White Blood Cell Fights GIANT GERM!

Protein synthesis animation


Electron transport chain


(47) Your Body's Molecular Machines - YouTube


Your Body's Molecular Machines


From DNA to protein - 3D

White Blood Cell Fights GIANT GERM!

வெள்ளி, 22 நவம்பர், 2024

உடல்நலம் கெட்ட சொற்கள்



சில சொற்களுக்கு
உடல்நலம் இல்லை!அகராதி
கவலையால்
உறங்கவில்லை!
மருத்துவத் தொடர்பான சொற்கள்
ஊர் நோயாளிகளைப்
பார்க்கப் போய்விட்டன.
மருந்துப் பெயர்களில் பற்பல
மூப்படைந்து
காலக்கெடுவைத் தாண்டிஅங்கங்குப்
பக்கங்களில் படுத்துக்கொண்டிருந்தன
எந்த ஊரிலும்
நோய்வாய்ப்பட்ட சொற்களுக்கென்று
மருத்துவநிலையங்கள் இல்லையே!
அகராதி "கூகுலுக்குள்ளும்"
தேடிப்பார்த்தது.பயனில்லை.
உடம்பு நடுங்கும்
ஒரு சொல்லுக்குப்பேகனிடம்கேட்டு அகராதி ஒரு
போர்வை வாங்கி வந்தது.
ஒருசொல்
விடாமல்காய்ச்சலோடு
இருமிக்கொண்டிருந்தது
அகராதியின்
மார்புக் கூட்டில் கலவரம் புகுந்தது
முல்லைக் கொடியிடம்
கெஞ்சிக்கேட்டுப்பாரி தேரை வாங்கிக்கொண்ட
அகராதி
துணைக்கு இரண்டொருசொல்லை
அழைத்துக்கொண்டு
சங்கத்தெருவெல்லாம் அலைந்தது
மருந்துக்காக.
எதற்கும்
திருவள்ளுவரையே
கேட்டுப் பார்ப்போம் என்று
தேரைத் திருப்பியது
அகராதி.
உடல்நலம்கெட்ட சொற்களை
அழைத்துவராமல்
திடுமென நீமட்டும்
வந்துநிற்கிறாயே
நான் என்ன சொல்லமுடியும்?
என்றார் திருவள்ளுவர்
"தவறுதான்
கவலை காரியமாற்றாதுதான்"
என்று தலைகுனிந்த
அகராதி
உடன்வந்தசொற்களோடு
திரும்ப முற்பட்டபோது
"கொஞ்சம்நில்"
என்ற திருவள்ளுவர்
மருந்து அதிகாரத்துப்
பத்துமாத்திரைகளைப் பனையோலை
ஒன்றில்
மடித்துக்கொடுத்துவிட்டுச்
சொன்னார்
"எதற்கும்
சொற்களை நோய்பரப்பும்
பொய்யோடும்
புறங்கூறலோடும்
பழகாதவாறு பார்த்துகொள்.
நோய்இறங்கலாம்"
என்றார்.
இப்போது
தேர்
வார்த்தை வளாகத்தைநோக்கித்
திரும்பிக்கொண்டிருக்கிறது
.............................................................
22-11-2024 காலை 6-மணி
உடல்நலம் கெட்ட சொற்கள்-தலைப்பு
.........................................................................


உடல்நலம் கெட்ட சொற்கள்‍ என்ற தலைப்பில்
22-11-2024 காலை 6‍ மணிக்கு எழுதிய‌
ஈரோடு தமிழன்பன் கவிதைக்கு பாராட்டு.
................................................


கவிதை அண்ணலே!
___________________________________________________

கவிதை அண்ணலே!
உங்கள் சொல் தேர்
புகாத இடமில்லை.
உங்களுக்கு
பீலிபெய்ச் சாகாடு கூட‌
அச்சிறாது
அச்சொற்பண்டம் சால மிகுத்துப்
பெய்யினும்.
சொற்களின் உடல் நலம் கெட‌
சொற்களின் உள்ளம் 
புகுந்து பார்க்க வேண்டும்.
உங்கள் கவிதைளில் நுழைந்து
வருபவர்களின் சொற்களில்
நோயேது? நொடியேது?
வள்ளுவரின் ஓலை மருந்து
உதவிக்கு வந்தது.
தினம் தினம் தங்கள்
கவிதை ஏந்தி வரும்
சொற்களே
எல்லாமும் தரும்.
எல்லா நலமும் தரும்.
எல்லா வளமும் தரும்.
பரவாயில்லை
உங்கள் தேர்
எல்லா மூலை மடுக்கும் 
உலா வரட்டும்.
பாரி நாட்டுக்கு கூட‌
சென்ற தாக சொன்னீர்களே.
உங்கள் தேரை இந்நேரம்
பறி முதல் அல்லவா செய்திருப்பான்.
முல்லையின் மெல்லிய‌
உள்ளங்கள் கூழாகிப் போனதென்று
தேர்களையே அதற்கு
தேசவுடைமை ஆக்கியவன் அல்லவா
அவன்.
சொற்களின் உடல் நலம்
அவற்றின் ஒலி நலமே.
இந்த பனங்காட்டில் அதன் 
ஒலி மழையில் 
நனைந்தாலே
அதில் சங்கத்தமிழின்
உயிரளபடை ஒற்றளபடை
இன்னிசை அளபடைகளின்
மாத்திரைகளை உட்கொண்டாலே
போதுமே.
இருப்பின்
உங்கள் தமிழ்ச்சொற்களின்
மருத்துவ உலாவுக்குள்
ஒரு "மூவர்"உலாவும்
உள்ளது.
அது 
உங்கள் மொழி ஆற்றல்.
உங்கள் சொல் ஆற்றல்.
உங்கள் அறிவு ஆற்றல்.
வாழ்க நீவிர்!
வாழ்க நீவிர் நீடூழி.
__________________________________________
சொற்கீரன்.














தகவல் பிரபஞ்சம்

 தகவல் பிரபஞ்சம் (DATAVERSE)

_______________________________________________________________


என்வீடியா என்றொரு தகவல் உருவாக்க கம்பெனி அமெரிக்காவில் இயங்குகிறது.இதன் தொழில்நுட்ப வீச்சுஇந்த உலகையே விழுங்கி உட்கொண்டு ட்ரில்லியன் ட்ரில்லியன் டாலர்களை குவிக்கும் திறனை தனக்குள்  வைத்திருக்கிறது.இதனை அப்படியே வாங்கிக்கொள்ள உலகின் மற்ற பெரிய கம்பெனிகள் எல்லாமே போட்டியிடுகிறது.சான்றாக டி எஸ் எம் எனும் கம்பெனி இந்த என்விடியா ஏ ஐ கம்பெனி மூலம்தன் உற்பத்தி சாதனையில் சுமார் 4400 % அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த உலகின் எந்த ஒரு புழு பூச்சியும் அல்லது ஒரு நுண்ணிய வைரஸ் உயிரி கூட அல்லது எந்த ஒரு ஃபோட்டான் கூட இந்த என்வீடியா கம்பெனியின் "வலை வீச்சிலிருந்து"தப்பிக்கவே முடியாது.

எனவே இந்த பிரபஞ்சங்கள் எல்லாமே கூட இதன் ஒரு விரல் சொடக்கில் பிடிபட்டு போய்விடுமோ என்னும் அளவுக்கு இந்த கம்பெனியின் தகவல் தொழிநுட்பத்திறன் வியக்க வைக்கிறது.இது இந்த 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய "அதிசய"மாக இருக்கும் என்று தொழில் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.


__________________________________இ பரமசிவன் எம் ஏ, டி ஆர் எஸ்,எஃப் ஐ ஐ ஐ.



Nvidia’s $ 1 Trillion AI Pivot

வியாழன், 21 நவம்பர், 2024

"அன்புமனம் கனிந்தபின்னே.."

 

old movie tamil aalukkoru veedu  .............(link)


"அன்புமனம் கனிந்தபின்னே.."

ஆளுக்கொரு வீடு (1960)

_____________________________________________________


இது பாட்டா?

பட்டாம்பூச்சிகள் கொத்து கொத்துகளாய்

என் முகத்தை மொய்த்தது போல்

ஒரு மயக்கத்தை ஏற்படுத்துகின்ற பாடல்.

பதினெட்டாவது படியில்(வயது)

நின்று கோண்டு

என் ஊஞ்சல் கயிற்றை அந்த‌

வானத்தை நோக்கி

எக்கி எக்கி வீசி

தொங்கவிட்டு ஒரு ஏக்கத்தின் 

உச்சிமுனையைத்தொடும்

ஊஞ்சல் ஆட்டத்தின்

கனவுப்பாடல் இது.

பி பி எஸ் ..சுசீலா இணைந்து

பாடியது.

பாட்டின் காட்சிக்கேற்ற வாறு

ஒரு மாலைச்சூரியன் 

சன்னல் வழியாய் 

தங்க முலாம் பூசியதில்

ஏதோ ஒரு மஞ்சள் ஆற்றில்

மூழ்கி மூழ்கி நீந்திக்களித்தது போல்

உணர்வு.

எனது ஊர் கல்லிடைக்குறிச்சி.

இதை தழுவிக்கொண்டு ஓடும்

தாமிரபரணியில் 

இந்த பாட்டுடன் 

நான் குமிழியிட்டு குமிழியிட்டு

குளித்த போது

பாட்டின் ராகம் என்னுள்

புது புது ரத்தத்தை தங்கமாய்

காய்ச்சி உருக்கி இழைத்து...

ஆற்றில் கரைந்து போனதாய்

ஒரு உணர்வு.

இந்தப்பாட்டைக்கேட்டு

காலப்பயணத்தை

பின்னோக்கித் தொடருங்கள்..

புரியும்...

அந்த இசைக்குமிழி வீட்டுக்குள்

நீங்கள் நுழைந்து கொண்டிருப்பது..


_______________________________________________

சொற்கீரன்.

புதன், 20 நவம்பர், 2024

நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே

___________________________________________


நண்பனே நண்பனே

யாரைக்கூப்பிட்டேன்

தெரியவில்லை.

என்ன இப்படிச்சொல்லுகிறாய்

உன்னெதிரில்

நெட்டைப்பனைமரம் போல்

நின்று கொண்டிருக்கிறேனே

தெரிய வில்லையா?

சரி..

நெட்டையாகவா?

அண்ணாந்து தான் பார்ப்போமே

என்று பார்க்கிறேன்.

அய்யய்யோ.

உயரே மின் கம்பியில்

ஒரு காக்காய் அடி பட்டு 

தொங்கிக்கொண்டிருக்கிறது.

அதற்குள்

கா கா கா கா...கா...கா

என்ற ஒலி மழை

செவியெல்லாம்

சல்லடை ஆகி விட்டது.

இமயம் சரிந்தது..

வானம் வீழ்ந்தது...

என்று அச்சடிக்கப்பட்ட‌

கருப்பு மையின் 

சொரித்தனங்கள்

எதுவும் இல்லாமல்

கருப்பின் கண்ணீர்க்கடல்

அஞ்சலி போஸ்டராய்

விம்மிப்பரந்து நின்றது.

அந்தக்கம்பியில்

தொங்கிக்கொண்டிருந்தது

நானா?

நண்பனா?

சடக் என்று 

ஒரு முறிவு சத்தம் எழுப்பியது.

மன முறிவு என்று

நான் படுக்கையில்.

மருத்துவர் ஏதோ

கிறுக்கினார் காகிதத்தில்.

கிறுக்கு 

யாருக்கு

அந்த காகிதத்துக்கா? பேனாவுக்கா?


______________________________________________________

சொற்கீரன்.




முகம் மட்டும்....

 

பெண்ணே!

உன் முகவரியை 

முகத்தில் தேடினால்

அது

உன் முத்துப்பல் 

சிரிப்பைக்காட்டியது.

முத்துக்களின் அருவியில்

தேடினால்

அதோ இரு கருவண்டுகள் 

என்று காட்டியது.

அந்த இமைச்சிறகுகளில்

இமய மலையின்

பனிச்சறுக்கு

எங்கோ இழுத்துக்கொண்டு

போகிறது.

அப்புறம் எங்கே போனேன்

என்று தெரியவே இல்லை.

சிரிப்பின் 

க்ளுக் ஒலிகள்

சோழிகளை குலுக்கிக்கொண்டே

இருக்கின்றன.

பெண்ணே

மீண்டும் கேட்கிறேன்

உன் முகவரி தான் எது?

"மூனு"க்கு வாருங்கள்.

ஓகோ!

அந்த வட்ட நிலா தானே.

இதோ வருகிறேன்.

அசையாமல் 

அலுங்காமல் குலுங்காமல்

எப்படிச் சிரித்துக்கொண்டே

உறைந்து கோண்டே என்னை

உறைய 

வைத்துக்கொண்டே இருக்கிறாய்

வட்ட நிலாவாய

"தொப்"

என்ன இது?

அந்த பளிங்கு முகம் 

சில்லு சில்லாய்..

வளைந்து நெளிந்து

ஆடி குலுங்கி..

ஒரு கண்ணாடிப்பரப்பு போல்

இருந்த‌

தடாகத்தில் 

தடுமாறி விழுந்தேன்.

அப்புறம் 

நான் நான் இல்லை.

அவள் நினைவின் உருவு

மீண்டும்

ஜிகினா விழுதுகளாய்

என்னைச்சுற்றி

அலைகளாய் சுருண்டு கொண்டது.

உன் முகத்தின் முகவரி வேண்டாம்.

முகம் மட்டும் காட்டு...


__________________________________________

சொற்கீரன்




திங்கள், 18 நவம்பர், 2024

"போதுமானவை"

 ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

_________________________________________

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் பற்றி கவிதைகள்

________________________________________________________




வானத்தோடு 

பேசவேண்டுமென்றால்

இந்த "மேகங்களை"

நம் உதடுகள் ஆக்கி

"டப்பிங்" 

கொடுக்கச்

சொல்லவேன்டும்!

வரிசையாய் 

உவமைகளைக்கொண்டு

அற்புதமான‌

தோரணவாயில்

அமைத்துள்ளீர்கள்!

தமிழ் கொண்டு கட்டிய‌

அரண்மனை இது.

அழகு மனையும் இது.

இந்த உலகத்தையே

தன் "வேர்வைத்தொகுப்பு" வெளியிட்டு

படைத்தவன் அல்லவா

மனிதன்.

இதைச்சொல்லிய‌

உங்கள் பேனாவுக்கு

இதுவே

ஒரு வைரக்கிரீடம்!


_____________________________________

சொற்கீரன்







வானத்தோடு
பேசவிரும்பினால் யாருக்கும்
உயரங்களின் உதவி
கிடைக்கவேண்டும்.
உயரம்
உடம்பில் இருக்கவேண்டுமெனும்
கட்டாயம் இல்லை
உடுக்களோடு
உரையாட வேண்டுமெனில்
யாருக்கும்
வெளிச்ச மொழியில்
தேர்ச்சி தேவை.
சூரியப்பல்கலையில்
படித்துப்
பட்டம்பெற்றிருக்க வேண்டுமெனும்
கட்டாயம் இல்லை.
சூரியப்பல்கலை இணைவுபெற்ற
அகல்விளக்கோடோ
மெழுகுதிரியோடோ
தொடக்கக் கல்விபெற்றதற்கான
சான்றிதழ் இருந்தால்கூடப்போதும்.
முன்னேற்றங்கள் வைத்திருக்கும்
முகவரிப் புத்தகத்தில்
ஒருவர் பெயர்
இடம்பெற வேண்டுமெனில்
அவரின் சோதிடச்
சாதகக் கட்டங்களின் ஆதரவு
கட்டாயம் தேவையில்லை.
வேர்வைத்த கபால விளைச்சலின்
ஆதரவும்
வேர்வைத்தொகுப்பின்
ஆதரவும் இருந்தால் போதும்.
.................................................
போதுமானவை-தலைப்பு
19-11-2024
காலை 7-50

ஞாயிறு, 17 நவம்பர், 2024

குழந்தை ஆகிறார் தாத்தா

 

குழந்தை ஆகிறார் தாத்தா

தொட்டிலில் ஆடுகிறார்.

மகிழ்ச்சியின் வெள்ளம்.

வெள்ளமோ வெள்ளம்.

சூரியனும் நனைந்தான்!

அவர் பேனாவும் காதிதமும்

தங்கச்சிறகு முளைத்து

கவிதையால்

முட்டுகிறது வானத்தை.

பேரன் வெற்றிக்கு

எங்கள்

ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள்.

இப்போது தான் பிறந்திருக்கிறது

இன்னொரு கவி இமயமாய்

பேரனோடு விளையாட.

இது வெறும் "பிள்ளைத்தமிழ்" அல்ல!

தங்கம் சுடர்ந்த‌

"பேரப்பிள்ளைத்தமிழ்"

வாழ்க வாழ்க‌

எங்கள் "புதிய தமிழ்த்தாத்தா"

பல்லாயிரம் பல்லாயிரம் 

பல்லாயிரத்தாண்டு வாழ்கவே!

________________________________________

சொற்கீரன்.

(ஈரோடு தமிழன்பன் அவர்களின்

பேரன் சிறகுபந்து விளையாட்டில் தங்கப்பதக்கம் 

பெற்றது பற்றிய வாழ்த்துக்கவிதை இது)



"விஷ்ணு ஜெயந்த் நர்லிகர்"

 


"விஷ்ணு ஜெயந்த் நர்லிகர்" இவர் பெருமைக்குரிய நம் இந்திய விஞ்ஞானி.புகழ்பெற்ற ஃப்ரெட் ஹோய்ல் 

என்பவருடன் இணைந்து விண்வெளியியலைப்பற்றி ஒரு கூர்மையான கருத்தை வெளியிட்டார்கள்.அதன் சாறு

இதுவே: பெருவெடிப்பு நம் கற்பனை.ஒரு பெரு நிகழ்வுக்கு முன் எது பின் எது என்ற சிந்தனையில் ஒரு பெருவெடிப்பை சுமந்து கொண்டு விட்டோம்.ஆதி அந்தமில்லா(அருட்)பெருஞ்சோதி என்று ஒரு தத்துவமும் 

நம் தலை மேல் போக்கு காட்டிக்கொண்டு தான் இருக்கிறது.எனவே நாம் "ஸ்டெடி ஸ்டேட் தியரி ஆஃப் யுனிவர்ஸ்" என்ற ஒரு கோட்பாட்டைத்தான் கைக்கொள்ள வேண்டும் என்கிறார்.பெருவெடிப்பு தோன்றிய புள்ளி

ஆதி புள்ளி என கணித சமன்பாடுகள் செய்து கொண்ட பின் இன்று ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி ஒன்று சொல்கிறது.அதன் அருகே இன்னும் சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு விண்மீன்கூட்டம் இருக்கிறது என்று சொல்கிறது.அப்படிப்பார்த்தால் பிரபஞ்சத்தின் வயது 25 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் அல்லவா இருக்கவேண்டும்? எனவே பெருவெடிப்பை வைத்து "ஆதி"புள்ளியை சொல்வது அடிபட்டு போகிறது.

"அது அது அப்படியே உள்ள" ஒரு பிரபஞ்ச மாடல் ஒன்றைத்தான் (ஸ்டெடி ஸ்டேட் யுனிவர்ஸ்) நம் ஆய்வு மேஜையில் ஏற்றி வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்ய வேண்டும்.


இதுவே இவர்து மையக்கருத்து. இதன் விவரம் காண உள்ளே  செல்வோம்.





In Conversation with Jayant Narlikar | Astrophysicist & Higher Education Teacher

சனி, 16 நவம்பர், 2024

கல்லறைத்தோட்டம்

 

அந்த மகத்தான கவிஞன் முத்துக்குமார்
அப்புறம் ஒரு நகைச்சுவை மன்னன் அல்வா வாசு
இன்னும் வரிசையாய்..
என்ன‌ கொடுமை?
இப்போது இந்த இளைய தலைமுறை
இயக்குநர் சுரேஷ் சங்கையா..
"ஒரு கிடாயின் கருணை மனு"
படத்தின் தலைப்பே
சிந்திக்கும் மனங்களில்
கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது...
ஒரு கலைப்படத்தின் சிகரம் தொட்ட‌
அந்த விளிம்பு இன்னும்
ஒரு விருது அதை ருசிக்கும் முன்னரே
விளம்பர வாசனைகளையும்
அது தொடும் முன்னரே
அவர் மறைந்து போன துயரம்
நம் நெஞ்சை அடைக்கிறது.
அது ஏன்
இந்த கல்லீரல்கள் எல்லாம்
கலைஞர்களுக்கு
கல்லறைத்தோட்டம் கட்டி
ஒப்பாரி வைக்க வருகின்றன.
கள் நெஞ்சன் எமன் கூடு கட்டும்
இடமா அது?
அந்த இளஞன் கனவுகள் எங்கள்
இமைகளின் மீதே
புதிய புதிய இமயங்களுக்கு
கால் கோள்கள் இட்டுக்கொள்ளட்டும்.
_________________________________________________
சொற்கீரன்

நெருப்பும் உயிர்ப்பும்..(erode thamizhanban)

நெருப்பின் கருப்பை

----------------------------------------------------------------------------------------

நெருப்பின் கருப்பை நீர்.
நீரின் கருப்பை நெருப்பு.
ஆனால்
இரண்டும் எதிரிகள்
ஆனது எப்படி?
முரண்படுவதே
உடன்படுவதின்
முதல் பாடு.
எரிவது தான் உயிர்.
எரிவது தான் மரணம்.
அறிவியல் விரிகிறது
நெருப்பின் உயிர்ப்பில் .
கவிதை நெருப்பில்
எரிவது எழுத்துக்களே
கவிதை நெருப்பில்
தெரிவதும் கவிதைகளே .
நெருப்பின் தோலையும்
உரித்துப்பார்க்கும்
அறிவியலே
இங்கு
சிந்தனை எரியும்
வெளிசத்தில் தான்.
------------------------------------------------
சொற்கீரன்


















நெருப்பு
உயிருடன் இருக்கிறதா என்று
விலகிநின்று தொட்டுப்
பார்த்த
காற்றின் விரல்களும்
தீபத் திரிகளாய் எரிந்தன
வெப்பம்
குறைந்ததா என்று அருகில் சென்று
அதனிடம்
கேட்கநினைத்த தண்ணீர்
பின்வாங்கி விட்டது
இன்றும்கூட
நெருப்பை அணைக்க யாரேனும்
முயன்றால்
பூமிக்கு
ஆதிநாளில் நெருப்பைக்கொணர்ந்த
புரொமித்தியூசின்
கண்கள் சிவந்துவெளிப்படுகின்றன.
சிக்கிமுக்கிக் கற்கள்
சீறியெழுந்து குறிபார்க்கின்றன.
நெருப்புத்தான்
உயிர்!
நிலைத்திருந்தது பிரிந்துவிட்டல்
உடம்பு சில்லிட்டுக் கிடக்கிறது
அதனால்
உயிர் நெருப்பு எரிந்து
வாழ்வைச் சமைத்துக்கொடுப்பதை
நன்றியோடு நாம்
உணரவேண்டும்.
இதயத்தில்
நெருப்பிருந்தால்
அது
சிந்தனையை, கலைகளைச்
சீரிய கவிதை காவியங்களைப்
படைத்துத் தருகிறது.
ஆயின்
இரவல்நெருப்புத்
தேடுபவனுக்கு இதயத்தில்என்ன
கிடைக்கும்?
இரவல்தாய் கிடைத்தால்
கேட்டுப்பாருங்கள்!
..........................................................
17-11-2024 காலை 6-56
நெருப்பும் உயிர்ப்பும்.... தலைப்பு...
ம் 4 பேர்

விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க

வெள்ளி, 15 நவம்பர், 2024

குடைக்குள் மழைபெய்ய‌...



குடைக்குள் மழைபெய்ய‌

______________________________________


குடைக்குள் மழைபெய்ய‌

குடை கந்தலாக 

இருக்க வேண்டியதில்லை.

மனம் கந்தலாகி விடாமல்

கொஞ்சம் துளி காதல் போதும்.

உங்கள் தமிழ்க் காதல் 

எனும் கற்பனைச் சுரங்கம்

எல்லையைக் கண்டதில்லை.

சொற்பஞ்சம் என்றும் இல்லை.

ஆயிரம் மழை கொட்டும்

சொல் மேகங்கள்

உங்கள் மீது அல்லவா

கவிந்து கொண்டேயிருக்கின்றன.

மழைத்துளிக்குள்

உங்கள் சொற்கள்

தூவாத சூரியன்கள் இல்லை.

வளைக்காத வில்லுமில்லை

வண்ணங்கள் ஏழு

விஞ்ஞானிகளுக்குத் தான்.

சொல் ஞானி அல்லவா நீ.

வண்ணக்குழம்பில் சொல்லெடுத்து

வானத்துக்கே குடை பிடிப்பாய்.

விசும்பின் ஒரு வியர்வைத் துளியில்

எத்தனை உலகங்கள் ஆக்கித்

தருகின்றாய்!

செல்லத்தின் செல்லமான‌

உன் உவமைப் பொமரேனியன்கள்

எப்போதும் உன் காலடியில்!


____________________________________________

சொற்கீரன்

(14.11.24ல்  ஈரோடு தமிழன்பன் மழைத்துளி பற்றி 

எழுதிய கவிதையில் நனைந்து எழு தியது இது.)






தத்துவமஸி

 

மனிதர்களில் 

மனித முகமூடி 

மாட்டியவர்களே அதிகம்.

பிறக்கும்போது

கோட்டு உருவமாக இருந்த‌

மனிதனுக்கு

என்பு தோல் போர்த்தவனாக‌

ரத்த சதையுடன்

ஒரு உருவம் கிடைக்கிறது.

மனிதன் என்பவன் யார்?

அவன் சிந்தனைக்குள்

என்ன இருக்கிறது?

என்ன இருக்க வேண்டும்?

இந்த இரண்டு கோடுகள் 

கிழிக்கப்படுகின்றன.

அவன் என்ன சிந்திக்க வேண்டும்

என்ற கோடு

இன்னும் வரையப்படாமலேயே

இருக்கிறது.

உன்னைப் பிறனில் நீ காண்.

மனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள்

என்று பெருகிய போது

கோடிக்கோடி கண்களும் காதும் வாயும்

இன்னும் முகமும் மூளையும்

ஒரே மனிதம்

என்று 

சூரிய ஒளி எல்லாம்

உருப்பெருக்கி வழியே பாய்ந்து

பின் 

ஒரு புள்ளியில் ஒடுங்குவது போல்

தெரியும் 

அந்த ஒற்றைப் புள்ளியாய்

அந்த ஒரே மனிதம்

ஆகி விடும்போது

அதன் ஆற்றல் என்ன?

அதன் அறிவு என்ன?

அதன் இன்பம் துன்பம் எல்லாம்

ஒன்றே.

அந்தபுள்ளியை

அந்த புள்ளியாய் ஆகி நீ

ஓர்மை கொள்வாய் ஆகில்

அது என்ன?

ஓர்மை கொண்டவர்கள்

கடவுள் என்று சொன்னால்

அது கற்பனை.

அந்த புள்ளியில் அவர்கள்

இன்னும் ஒன்றவில்லை என்றே பொருள்.

ஒன்றுமில்லை இங்கே.

எல்லாமும் ஒரு புள்ளியாய்

நிறைந்து மகிழ்ச்சியாய் 

இருப்பது மட்டுமே தெரிகிறது.

எல்லாரும் ஒன்றாய் இருப்பது மட்டுமே

புரிகிறது.

உலக நேயம் மனித நேயம் எல்லாம்

சமுதாயத்தில் சமநீதியோடு

அன்பு எனும் புள்ளியில் சேர்கிறது.

அது இல்லை என்றால் 

மனிதன் வெறும்

"என்பு தோல்"தான் என்கிறார்

வள்ளுவர்.

.............

போச்சு போச்சு எல்லாம் போச்சு.

இந்த வர்ணத்தையெல்லாம் 

அழித்து விட்டாயே...

இந்த பாவம் தோஷம் 

எல்லாம் போகவேண்டும்

எல்லாவற்றையும் அழித்து விடு.

போதும் உன் தத்துவம்.

"தத்துவ(ம்)அஸி யைத்தானே

சொல்கிறேன்."

வர்ண சாஸ்திரம் இல்லாத உன்

தத்துவமஸியை அழித்து எறி

.......................

அர்த்தமுள்ள இந்து மதம் 

என்று சொல்லிவிட்டு

அர்த்தமே இல்லாமல்

என்னவோ சொல்லிண்டிருக்கேளே!


_____________________________________________________

ருத்ரா

A PHYSICS OF NON-PHISICS

 

A  PHYSICS OF NON-PHISICS IS "HILBERT-SPACE" AND CAN WE TALK PHYSICS METAPHYSICALLY?





There’s No Wave Function? | Jacob Barandes

வியாழன், 14 நவம்பர், 2024

லுட்விக் போல்ட்ஸ்மேன்

 



லுட்விக் போல்ட்ஸ்மேன்

---------------------------------------------------------------



லுட்விக் போல்ட்ஸ்மேன்  ஒரு ஒப்பற்ற  அறிவியல் மேதை.வெப்ப ஆற்றல் 

அணுக்களின் விளையாட்டோடு அவரும் ஒரு உதை  பந்தாட்டம் ஆடினார்.

அவற்றிடையே உள்ள "பகிர்வை" கணித சமன்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

அந்த உதைபந்து தான்" என்ட்ரோபி ".

எப்படி?

பார்ப்போம் வாருங்கள்.





Entropy and H theorem: The mathematical legacy of Ludwig Boltzmann

"நவம்பர் பதினான்கு"

 "நவம்பர் பதினான்கு"

___________________________________


ஒரு ரோஜாப்பூ

ஒரு கோட்டின் பித்தானில்

பூத்தது

நமக்குத்தெரியும்.

அது உலக அமைதிக்கு 

சிறகடிக்கும் புறாவாக 

வானத்தில் எழும்பியதும்

நினைவுக்கு வருகிறது.

இந்திய மண்ணில் மதக்கள்ளிகள்

வேர் பிடித்து

சாதிவெறியின் நச்சுமரங்களின்

இருட்டு நிழல்களில்

மானுடம் எனும் மாணிக்கச்சுடர்

மங்கிக்கிடந்ததும் 

நம் மனங்களில் ஆறாத புண்களாய்

துன்புறுத்திக்கொண்டிருந்ததும்

நமக்குத் தெரியும்.

உலக வரலாற்று மேதை 

ஆர்னால்டு டாயன்பி 

"இந்த ஆசிய ஜோதி 

வரலாற்று ஆசிரியர் ஆகியிருந்தால்

நான் இப்படியொரு வரலாற்று மேதை

ஆகியிருக்கும் வழி

அடைத்து அல்லவா போயிருக்கும்"

என்று வியந்த ஒரு வரலாறும் உண்டு.

"தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா"

என்ற நூலே அது.

அந்த மானுடநேய "ரோஜா"வான‌

ஜவஹர்லால் நேரு

என்ற "மேரு"வின் மீது

இந்த மின்னட்டாம்பூச்சிகள்

மோதி மோதி

தம்மை இன்னும் மோசமான‌

ஒரு இருட்டு யுகத்துள் தள்ளி

வீழ்ந்து கிடக்கின்றன.

மதச்சார்பற்ற 

அந்த சோசலிசக் கட்டுமானத்தை

தட்டி நொறுக்க‌

அனுமார் வேடத்துக் கதாயுதங்கள் 

பெருங்கூச்சலோடு வருகின்றன.

இந்த "குழந்தைகள் தினத்தில்"

அந்த சுடர் முகம் நமக்கு

பெரும் அரணாய் நின்று

அமைதிப் புன்முறுவலோடு

எதிர் கொள்கிறது.

அமரர் நேரு 

அமைத்த பாதையே

மக்களின் பாதை.

"ஜெய்ஹிந்த."


======================================================

சொற்கீரன்









யாழ் மீட்டி....

 


ஒரு யாழுக்குக் குடியிருக்க
வீட்டைக்கொடுத்தவன்
பாட்டுக்கேட்க
எந்த சங்கீத சபாவுக்குப்போவான்?
அவன் வீட்டுக்கதவைத்தட்டி
எந்தக்கவலை உள்ளே புகமுடியும்?
வைகறைநுழையலாம்
ஒரு பூபாளம்என்னும்
புறநீர்மைப்பாட்டாகப்பார்த்து
அழைத்துக்கொண்டுவந்தால்,
இரவுநுழையலாம்
ஒரு நீலாம்பரிஎன்னும்
மேகராகக்குறிஞ்சிப்
பாட்டிடம்
பரிந்துரைக் கடிதம் வாங்கிவந்தால்,
குழந்தையின் தொட்டில்மெல்ல அசையும்.
இமைப்பொன் கதவுகள்
மூட இசையும்.
தூங்கி எழுந்தபெரியவர்
படுக்கைவிரிப்பை உதறினால்
அறையெங்கும் கமகங்கள் பரவும்,
ஒரு யாழுக்குக் குடியிருக்க வீட்டைக்கொடுத்தவன்
தெம்மாங்குக்கும்
கும்மிக்கும் குரவைக்கும்
சொந்தக்காரனாக இருப்பான்.
தாலாட்டுக்கும்
ஒப்பாரிக்கும் உறவாக இருப்பான்
தாலாட்டைக்கேட்பவன்
இன்னும் ஒருமுறை பிறக்கவிரும்புவான்
ஒப்பாரி கேட்பவன்
தனக்கான ஒப்பாரியை
இருக்கும்போதே கேட்டுவிட
ஆசைப்படுவான்
13-11-24 இரவு 9-40
தலைப்பு
வீட்டை யாழ்குடியிருக்கக்கொடுத்தவன்








யாழ் மீட்டி....

____________________________________________


"புல்லை நகையுறுத்தி
பூவை வியப்பாக்கி"
தந்தவன் தமிழை இங்கு
யாழ் நரம்பாக்கி
ஒலித்துடிப்புள் ஓராயிரம்
குகை பிளந்து
மேள கர்த்தா நாடிகள் ஊடி
விடியல் பண்ணின்
விழிவாசல் திறந்து
காட்டினாய்.
தாலாட்டுகளின்
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
தீர்ந்தபின்
ஒப்பாரியிலும் ஒரு
அகர முதல எழுப்பிக்காட்டினாய்.
ஒலி பிறக்கும் விண்ணிலிருந்து
இழிந்து வரும் அமிழ்த ஒலி
தமிழ் அருவி என்று
தடவிக்காட்டினாய்
உன் சொல் யாழ் மீட்டி.
இன்று அந்த கவிஞன்
ஒரு நாள் போதுமா?
எனக் கேட்க மாட்டான்.
ஏனெனில்
காலச்சுருதிகள் உன் தமிழில்
சுருட்டிக்கிடக்கும்
நயம் கண்ட பின்னே
நாவெழா மெய்விதிர்ப்பில்
மீண்டெழுந்து வந்து
உன் புகழ் தொடுப்பான்
உன் அகம் கலப்பான்
நம் செம்மொழித்தமிழாலே!
________________________________________
சொற்கீரன்

(13.11.24 அன்று இரவு 9-40 ல்
"வீட்டை யாழ்குடியிருக்கக்கொடுத்தவன்"
என்ற தலைப்பில்
ஈரோடு தமிழன்பன்
எழுதிய கவிதைக்கு ஒரு "இசைப்பாட்டு")