திங்கள், 20 மார்ச், 2017

ஆர். கே.  நகர் குறும்பாக்கள்

ஆர். கே.  நகர் குறும்பாக்கள்
===================================================ருத்ரா


குங்குமக்கலரில்..

.

காந்திப்புன்னகை நிறம் மாறியது.

குங்குமக்கலரில் கட்டு கட்டாய்

பாலாறு தேனாறு. ஆர்.கே நகரில்.


--------------------------------------------------------

எடப்பாடி


எடறி விழுமா தங்க நாற்காலி?

களை கட்டுது

"சீட்"டாட்டம்.

----------------------------------------------------------------

மதுசூதனன்.


கூனி வளைந்து கும்பிட்டு

அழைத்தது தானே

ஞாபகத்துக்கு வருகிறது.


--------------------------------------------------------------------


பன்னீர்.



அது "ஞானோதயமும் அல்ல."

அங்கு அது

போதி  மரமும் அல்ல,


------------------------------------------------------------------------


மருது கணேஷ்



"மீனவ நண்பர்" தான்.....அனால்

இவர் வலைக்குள் விழுமா

சூரிய விடியல் ?


---------------------------------------------------------------------------


வைகோ


இங்கல்ல தேவை இனி தேர்தல்.!

ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி

எங்கோ அது நடக்கட்டும்!


-------------------------------------------------------------------------------

புயல்


ஜனநாயகமே ஜாக்கிரதை!

கடல் வழியே புயல் மட்டும் அல்ல

கண்டெய்னர்களும் வரலாம்.


--------------------------------------------------------------------------------

122

இது நம்பர் அல்ல.

ஜனநாயகத்தை சிலுவையில் அறைந்ததன்

குறியீடு.


-----------------------------------------------------------------------------------

மதிப்பிற்குரிய லோகநாதன் அவர்கள்.


மதவெறியின்  இருண்டகண்டத்துக்கு எதிராய்

மார்க்சிசத்தின்

ஒரு மத்தாப்புக்குச்சி.


--------------------------------------------------------------------------------


கூவத்தூர் "சர்வீஸ் சென்டர்"


தேர்தல் கணிப்பொறிகள்

சார்ஜ் செய்யப்பட

இங்கே அடைகாக்கப்படலாம்.


--------------------------------------------------------------------------------


கங்கை அமரன்.


செந்தில் வாங்கிய அந்த

"இன்னொரு வாழைப்பழத்தை " தேடிப்புறப்பட்ட

அரசியல் "ஜோக்கின்" "கலகாட்டக்காரன்"


-----------------------------------------------------------------------------------


"அம்மா" நலத்திட்டங்கள்


பொழுது விடிந்து பொழுது அடைந்தால்

உச்சநீதி மன்ற தீர்ப்பின்

அவமதிப்புகள் தான்.


---------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக