செவ்வாய், 14 மார்ச், 2017

தீவுகவிதை என்றொரு தீவு .................ருத்ரா
===================================


வயிற்றுக்கு சோறு போல்
பாழும் மனத்துக்கு 
சோறு இது.
அதுவே 
எரிந்து
அது சமைத்து
அதுவே வெந்து
அதுவே
வரும்
வாய்முன்னே கவளமாய்.
காக்காய்க்கு போட்டாலும்
ஒரு காக்கா கூட வருவதில்லை.
சுற்றிலும்
அலையடித்துக்கொண்டு
பேய்வெளியில்
கடல் விரிப்பில்
தனித்து உறங்கி
இனித்த கனவின்
நுரைத்த தீவு இது.

"குபுக்"கென்று
ஒரு நாள் அவள் சிரித்தாள்!
என்னை நோக்கி விட்டதா
அந்த "இனிப்புக்குமிழி ?"
இன்னும்
அந்த குமிழி உடையவில்லை.மூழ்காது.
முடங்காது.
அகர முதல‌ தமிழின்
துளிகள் இருக்கும் வரை
நெஞ்சுக்குழியின்
கிடங்கில்
கங்குகள் கிடக்கும்வரை
சுகமான‌
தீவு இது.

=======================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக