சனி, 4 மார்ச், 2017

கறுப்பு ரத்தம்கறுப்பு ரத்தம்
========================ருத்ரா


அதன் வேதியல் பெயர்
ஹைட்ரோ கார்பன் என இருக்கலாம்.
ஆனால் நம் மண்ணின்
இந்த அடிவயிற்று வளம்
நம் கறுப்பு ரத்தம்.
வழக்கம்போல் இது
கார்ப்பரேட்டுகளால் உறிஞ்சப்பட்ட பிறகு
நம் தமிழ்நாடு
வெறும் கபாலங்களால்
மேடு தட்டிப்போகும்
இன்னொரு
"மொகஞ்ச தாரோ" வாய்
எஞ்சிநிற்கும் ஒரு அபாயம்
இங்கு நம் வரலாற்று சருகுகளில்
சர சர த்து ஒலிக்கிறது!
அந்த ராட்சச நாக்குகளின்
தாகம்
இங்கே கவர்ச்சிகரமாய்
மொழிபெயர்க்கப்படுகிறது
"வளர்சசி" என்று.

===============================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக