வியாழன், 16 மார்ச், 2017

மாநகரம்

மாநகரம்
=============================================ருத்ரா

வருகின்ற புத்தம்புதுசுகள்
என்னமோ
சமுதாயத்த்தின் "வண்டிமைக்கருப்பாய்"
இருக்கிற
மாநகரத்தின் "முகத்தை" மட்டுமே
மெருகுதீட்டி
பட்டையைக்கிளப்பி படம் எடுத்து விடுகிறார்கள்.
கனத்த இருளுக்குப் பின்னே தானே
விடியல் விளக்கெண்ணெய் எல்லாம்
என்று
ஒரு அச்சமூட்டும் வலது சாரி தனத்தை
பஞ்சுமிட்டாய் ஆக்கி
ஒரு இடது சாரி முத்திரையை
பச்சையாக பச்சை குத்தி கொள்கிறார்கள்.
இந்த "ஜிகர்தண்டாவுக்கு"
எத்தனை "வெர்ஷன்கள்" தான் போடுவார்களாம்?
தப்பை தட்டிக்கேட்பவன் தானே மனிதன்.?
என்று ஒரு அக்கினி ஜரிகையை
பின்னி வைத்துவிட்டு
பத்திரிகைக்கார பாசக்கார நண்பர்களுக்கும்
சிக்னல் கொடுத்துவிட்டு
நாப்பது அம்பது மார்க்குகளை
அள்ளிக்கொள்கிறார்கள்.
என்ன ? ஏன் இந்த எரிச்சல் என்கிறீர்களா?
பத்திரிகைகளும் இதில்
கொஞ்சம் "பெப்"ஏற்றிக்கொள்கின்றன.
சுதந்திரம் போலியாய் கிடைத்தது என்று
தொண்டை வரள கத்தும் இயக்கங்கள்
எழுபது வருடங்களுக்குப்பின்னும்
ஓட்டுக்குப்பைகளில்
அழுகிக்கிடப்பதைப்பற்றி
எந்த சொரணையும் சூடும் இல்லாத
இந்த எழுத்துப்புழுக்கள்
என்ன தான் க்ளாஸ்ஸி பேப்பரில்
அச்சிட்டு "அனல்" வீசினாலும்
அந்த "மாக்கியவல்லி" அரசு சூத்திரத்தின்
"சம்பவாமி யுகே " தந்திரங்கள்
பல்லை இளித்துக்காட்டத்தான் செய்கின்றன.
சமுதாய மலர்ச்சிக்கு கொஞ்சமும்
உதவாத "பழைய பாபு பாய் மிஸ்திரியின்"
புதிய  கணினி யுக
உத்திகள் மட்டுமே இவை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக