சனி, 4 மார்ச், 2017

"கைபேசி" பேசியது.

"கைபேசி" பேசியது.
==========================================ருத்ரா

குவாண்டம் ஃபிஸிக்ஸ்
குவாண்டம் டன்னலிங்
குவாண்டம் கம்பியூட்டிங்
இதோடு நின்றான் மனிதன்.
நடுவே புகுந்தது அரக்கன்.
அந்த விஞ்ஞானத்தை வளர்த்து
பணம் கொண்டு மனிதப்
பிணம் தின்ன வந்தான்.
வியாபாரம் என்றனர்.
கம்பெனி என்றனர்.
முந்துடா! மோதுடா!
முடிந்தால் வெட்டுடா குத்துடா
என்றனர்.
லாபம் குவிக்கும்
சாணக்கியத்தனங்கள்.
அதன் அரக்கனின் கையில்.
இன்னும் இன்னும் தளவாடங்கள் இதோ.
சாதி மதங்கள்
சண்டப்பிரச‌ண்ட புராணங்கள்.
தொலைக்காட்சி சினிமாக்கள்
சுண்டைக்காய்க்கும்
புடலங்காய்க்கும் பத்திரிகைகள்.
புதிய யுகம் படைக்கும்
இள நரம்புக் கைகளில்
வெறும்
காதல் அரிக்கும்
கம்பளிபூச்சிக்காடுகள்.
அதனால்
வெளிச்சம் மறைந்தது.
வேதனை மிகுந்தது.
ஒரு பெண்
அவளை வருடிக்கொண்டிருக்க‌
ஒரு கை பேசி
இது போதும் அவனுக்கு.
அப்படியே
அவளுக்கும்.
ஆனாலும் கொஞ்சம் வித்யாசத்தோடு
அவள் கையில்
கலைப்பூவாய் நெளிந்திருக்கும்
நெளிந்திருக்கும்
மெகந்தி சிலிர்ப்புகள்.
விபத்துகள்
ரோடுகளில் மட்டும் அல்ல.
வருங்காலம் முழுவதுமே
ஒரு புகை மூட்டம்.
சுடுகாட்டுப்புகை மூட்டம்.
அணுகுண்டுகள் வெடிக்கவேண்டாம்.
இந்த கபாலக்குப்பைகளே மிஞ்சிப்போன‌
மின்னணுக்களின்
விஷக்கொசுக்களே போதும்.
நம் சிந்தனைக்குள் எல்லாம்
மனித மதிப்புகளை கூறு போட்டுத்தின்னும்
வெறியின் அணுக்கதிர் மட்டுமே
எங்கும்! எங்கும்!
ஹிரோஷிமா நாகசாகிகள்
மிச்சம் மீதியாய்
எத்தியோப்பிய சிசுக்களின் எலும்புக்கூடுகளில்
மரண வரிகளை கொடும் வறுமையாய்
சித்திரம் காட்டிக்கொண்டிருக்கின்றனவே!

கைபேசி தொழில் நுட்பத்துக்கு
"விழா" எடுக்க அந்த‌
ஹெர்ம் ஹார்ட்ஸை
மீண்டும் பிறக்கவிட்டு
அனுப்பி வைத்தான் இறைவன்.
அவனும் வந்தான்.
மானிடத்தின் பரிணாமம்
படுகுழிக்குள் வீழ்வதற்கா
இந்த "மின்காந்த அலைகளை"
இவர்களிடம் விட்டு வைத்தேன்?
வந்தவன் விக்கித்துப்போனான்.
விக்கித்தவன்
தூக்கிலிட்டுக்கொண்டான்.

=================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக