சனி, 25 மார்ச், 2017

ரஜனிக்கு நன்றி!

ரஜனிக்கு நன்றி!
====================================ருத்ரா இ பரமசிவன்.

தமிழர்களின்
உரிமைக்குரல்களின்
உஷ்ணத்தை புரிந்து கொண்ட
நயத்தக்க நல்லவர் ரஜனி.
உயிரைக்காக்கும்
98.4 டிகிரி உஷ்ணத்தைக்கூட
சூடு சொரணையாக
இந்த தமிழ்ப்பாமரர்கள்
பெற்றுவிடாமால் அவர்கள்
நடை அல்லது கிடைப்பிணங்களாய்
இருந்தால் போதும்
என்று
என்னென்னவோ சாணக்கியங்கள்
அரங்கேற்றப்படுவதைப் பார்க்கிறோம்.
அன்றைக்கு இந்த குரங்குத்தமிழன்கள்
"சேது பந்தனம்" கட்டியதாய்
பூரித்தவர்கள்
இன்று லட்சம் தமிழன்களின்
பிணங்களை அடுக்கி
சிங்களத்தவனோடு நட்புப்பாலம்
போடுவதன் உட்குறிப்பு என்ன?
அவன் "புத்த மதம் தழுவியிருந்தாலும் "
பரவாயில்லை
அவன் மொழிக்குள் இந்தியின்
மூலம் முளைக்கட்டியிருக்கிறதே
அது போதுமே
அவனுக்கு திருப்பதி லட்டுகளுடன்
பூரண கும்பம் ம ரியாதை கொடுக்க.
"இறையாண்மை" அது இது
என்ற அரிதாரத்துக்குள்
தமிழ் மொழியின் உயிர் வீச்சை
அதன் உள்  மூச்சை
அவித்து விடுவது ஒன்றே அவர்கள் குறி.
சிந்து தமிழின் மூலச்சித்திரமே
இந்த பரத கண்டம் என்ற
வரலாற்று நெருப்பை மூடி மறைப்பதே
இவர்களின் யாக குண்ட மந்திரங்கள்.

எங்கள் அன்பான தலைவரே !
ரஜனிகாந்த் அவர்களே !
நீங்கள் "சூப்பர் ஸ்டார்"என்பதன்
இலக்கணக்குறிப்பு
எங்கள் தமிழில் இன்று தான்
சுடர் விட்டு ஒளிர்கின்றது.
உங்களை கோழை என்று
சொல்கின்ற சூரபத்ம அசுரர்கள்
"சுப்பிரமணியன் சுவாமி"வேடத்தில்
இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் என்றால் சிவன்.
தமிழ் என்றால் முருகன்.
இவருக்கு மட்டும்
சிவனும் முருகனும் "பொர்க்கி"கள்!
எங்கள் இதய நரம்புகளின் முடிச்சுகளில்
அதன் கண்ணிகளில்
ஈழத்தமிழன் கண்ணீரே கடல்களாய்
கொதித்துக்கிடப்பதை
உணர்ந்த உங்கள் உள்ளத்துக்கு
எங்கள் கோடி கோடி நன்றிகள்.
இலங்கைக்காரன் விளம்பரவிளையாட்டில்
அந்த "அட்டை வீடுகளில் "
செட்டிங் போட்டு ஷூட்டிங்க் நடத்தும்
சூழ்ச்சி வலைகளை புரிந்து கொண்டதற்கு
நன்றி நன்றி நன்றி !
"கல் பொருதிரங்கும் மல்லல் பேர் யாறு"
எங்கள் தமிழின் ஆறு.
உணர்ச்சிப்பெருக்கு எனும் அந்த
"ஆறு படையப்பா" அல்லவா நீங்கள்!
ரஜனிக்கு நன்றி!
மீண்டும் சொல்கிறோம்
அன்பான எங்கள்
ரஜனிக்கு நன்றி!

====================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக