https://www.youtube.com/watch?v=MFrfMWLRWTI
இது ஒரு நாகரிக வளர்ச்சியின் சின்னம்.
இதன் மூலம்
உலக மக்களின் வறுமையும் பிணியும்
நீக்கப்படலாம்.
இதற்கு தடையாக இருப்பது
அதன் உள்முரண்பாடுகளே.
தனி மனிதன் ஒரு மகத்தான ஆற்றல் தான்.
அது எல்லா "மனிதன்"களிடமும்
ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்.
இப்போது
தனிமனித உந்தம்
பொது மனித உந்தம்
இரண்டும் முரண்பட்டு நிற்கின்றன.
ஒன்று இன்னொன்றை
உட்கொள்ள முனைகிறது.
பொது நலம் பின்னுக்குப்போய்
தனி நலம் ஆட்சி செய்ய முனைகிறது.
இது "சுரண்டல்"வெறியாய்
பூதாகரம் ஆகிறது.
இதன் கொடூர பற்களும் நகங்களும்
தன்னை அழகிய முதலாளித்துவமாக
வெளிப்படுத்திக்கொள்கிறது.
மிக முக்கிய "அரசியல்"கூர்மைத்திறம்
இதில் தான் போட்டி போடுகிறது.
நம் பெருமதிப்பிற்குரிய "பாலு" அவர்கள்
இந்த சிந்தனைப்போக்கை
மிக மிக அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இன்றைய உடனடி அவசரத்தேவை
"அரசியல் படுத்தப்பட்ட மனிதம்" மட்டுமே.
மார்க்ஸ் அம்பேத்கார் பெரியார் அண்ணா
என்ற
மனித ஆளுமைகள் இந்தப்பாதையில்
பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன.
ஆனல் பெருந்துயரம் என்ன வென்றால்
நம் "அரிதார மோகம்"
நம்மையே கரையான்களாய் அரித்துக்கொண்டிருக்கிறது
என்பது மட்டுமே உண்மை.
அவரது பேச்சு அல்லது இந்த
சிந்தனைப்பொழிவு
இந்த இளைய தலைமுறைகளுக்கு
மிக மிக அவசிவம்.
அவருக்கு
என் நன்றியும் பாராட்டுதல்களும்.
___________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக