"பொட்டு வச்ச முகமோ"
__________________________________
ஒரு சனாதனி உங்கள் மீது
சீறிய போது
"ஜோசஃப் விஜய்" என்று
எதிர் முழக்கம் செய்தீர்களே!
இன்று எப்படி
"பொட்டு வச்ச" முகதோடு
கிளம்பி விட்டீர்கள்?
இன்று மக்களின் மீது
ஒரு சோகம் கீதம் இசைக்க
ஒரு கருவியாகிப்போனீர்களே.
அந்த நாற்பது ஆத்மாக்களை
நெரிசல் எனும் சிலுவையில்
ஏற்றுவதற்கு
காரணமாகிப்போனீர்களே.
இந்த ஆட்டுக்குட்டிகளின்
மேய்ப்பரான நீங்கள்
உங்கள்
செங்கோல் அரங்கேற்றத்துக்கு
ஸ்கெட்ச் போடுகிறேன் என்று
ஜனநாயக் மாண்புக்கு
கல்லறை கட்ட ஏன் துடிக்கிறீர்கள்?
ஓ!எங்கள் அன்பான
விஜய் அவர்களே!
உங்கள் சதுரங்க கட்டங்களுக்குள்
இந்த வெள்ளத்துக்கு
வாய்க்கால் கட்டும்
தந்திரங்களில்
அந்த சாதி மத சைத்தான்களும்
கூட்டணி சேரும்
சூழ்ச்சியை உங்களால்
முறியடிக்க முடியுமா?
"கோட்" என்று படம் காட்டினீர்கள்.
வெறும் "வெள்ளாடு" போல்
பலியாகி விடாதீர்கள்.
உண்மையிலேயே உங்கள்
"ஒற்றை விரல்" புரட்சிக்கு
சமாதி கட்டும்
தேர்தல் ஆணயத்துக்கு எதிராய்
அரிதாரம் பூசிக்கொண்டு
அலை விரித்தால் கூட போதும்!
செய்வீர்களா? செய்வீர்களா?
____________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக