கரூர்
________________________________
தறி நெசவுகளின்
இலக்கிய பூமியில்
தறி கெட்ட
மரண ஓலங்களா?
சினிமாத் திரையின்
இனிப்பு லாலிபாப்புகள்
மனித இதயங்களை
தின்று தீர்த்தனவா?
மகரந்தம் இல்லாத
மடிகளில் வீழ்ந்தா
மலர நினைத்தீர்கள்?
பாப் கார்ன் காட்சிகளில்
பசியாறும் விளையாட்டுகள்
போதும் மக்களே!
பசியின் நெருப்புப்பொறிகளில்
பரல்கள் சிதறும் சிலம்புகளை
உடைக்கும் தருணங்களில்
இந்த பூப்பந்துகளா
போக்கு காட்டுவது?
உங்கள் கனத்த இரவுகளில்
இந்த அரிதாரங்களா
விடியலின் பாய்மரங்களை
விரித்து தரும்?
____சொற்கீரன்____
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக