புதன், 3 செப்டம்பர், 2025

அம்பத்தேழாவது திருமண நாள்.

 


அதே புத்தம் புதிய காலை.

கிழக்கின் இனிய விளிம்பு.

அதே 

சலவை செய்யப்பட்ட சூரியன்.

கனவின் அதே

சோப்புக்குமிழிகள்.

அதே வானம் 

எங்களுக்கு கிச்சு கிச்சு மூட்டும்

தோரணங்களுடன்.

ஆம்.

எங்கள் 

அம்பத்தேழாவது திருமண நாள்.

___________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக