அகழ்நானூறு 102
________________________________
மைபடு மஞ்சு சூல ஆர்கலி
சிலம்பு சூழ் கழைநெடு அடுக்கத்து
வேழம் முறித்து உண்ணும் ஆங்கு
வேழம் குழூஉய் கைகள் நீட்டும்
வெண்முத்துக் குடை தூங்கு
விண் வெள்ளிய தெள் நிலவு.
வீ உதிர் பொறி வேங்கை
தாழ் படுத்த கொழுநிழலில்
தளிர் குழைத்த தண்முகத்து
முறுவல் உதிர் மின் ஒளிர்பு
சுரத்தன்ன குறிக்கு குறி எய்தி
இரவு விழுப்புண் ஏந்தல் ஆறு
அவள் விழிப்புண் ஏந்தி ஆங்கு
வீழ்ந்தான் கடு மள்ளல் ஏறு.
________சொற்கீரன்_______________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக