ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

மத்தாப்பு கொளுத்துகின்றீர்.

 

மத்தாப்பு கொளுத்துகின்றீர்.

______________________________________


அறிதாரம் புகுந்தாலும்

அறியாமல் இருந்தாலும்

அன்புச்செல்வங்களே

அரிதாரம் புகுகின்ற இந்த‌

அவலங்கள் ஏன்? ஏன்?

அவதாரங்கள் என்று

அமிழ்ந்ததும் போதாதா.

சாதி மதப்பேய்களின்

சரித்திரத்து வீழ்ச்சிகளில்

சரிந்து கிடந்ததும்

போதாதா?போதாதா?

மனிதம் மலர்கின்ற‌

சிந்தனை மலராமல்

மத்தாப்பு கொளுத்துகின்றீர்.

மறைத்துக்காட்டும்

சினிமா வெளிச்சத்தில்

மனங்கள் தொலைத்தீரே.

பகுத்தறிவுச் சுடரேந்தி

பளிங்கு மனத்தெளிவோடு

பாதை நடப்பீரே

படைத்திடுவீர் புத்துலகை!

_____சொற்கீரன்____

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக