______________________________________
சொற்கீரன்
ஒன்று இரண்டு
மட்டும் இருந்தால்
ஒற்றையா? இரட்டையா?
விளையாடலாம்.
அதையே
ஃப்லிப் ஃப்லாப் ஆக்கி
ஆன்..ஆஃப் கேட்ஸ்ல்
கணிப்பொறிகளின்
ஆயிரம் விந்தைகள்
நிகழ்த்தலாம்.
அது
இரண்டுக்குள் இல்லை.
அது மில்லியன்..பில்லியன்களையும்
தாண்டிய
"பாண்டி விளையாட்டு" ஆனது.
குவாண்டம் கைப்பிடிக்குள்
பில்லியன் பில்லியன்
மின்னல் பூச்சிகள்.
இதைக்கொண்டு
கணிப்பொறி ஆக்கினால்
பிரபஞ்சங்களே நம்
பகடைக்காய்கள்.
இதை வைத்துக்கொண்டா
மார்க்கெட்டிங்
சரக்கு மூலைளை
சதிராடுவது?
அதனால் ஏ ஐ இங்கே
ஆயிரம் ஆயிரம்
அலாவுத்தீன் பூதங்கள் ஆகி
தீனிகள் கேட்கின்றன.
இரைகள் கேட்கின்றன.
மனிதனின் நிழலே
மனிதனை வேட்டையாடும்
அசுர விளையாட்டு இது.
இந்த பூதங்களிடம்
ஒரு கோரிக்கை வை.
உலகத்தில் எங்கும்
பசி பட்டினி இருக்கக்கூடாது.
எல்லோரும் எதிலும் இங்கு
சமம் ஆக வேண்டும்?
எல்லாவற்றுக்கும்
செயற்கை மூளை வைத்தவன்
இந்த சமநீதிக்கு
ஒரு செயற்கை நுண்ணறிவு சூத்திரம்
செய்தால் என்ன?
மனிதனின் இந்த
"நாய் வால்"
நிமிர்ந்த நிகழ்வு உண்டா?
மனிதன் நடத்திய நிகழ்வுகளே
புரட்சிகள்.
அதன் தடங்களில்
அதன் சுவடுகளில்
அதன் நிழல்களில்
தினம் தினம்
புது புது சூரியன்கள்
முளைக்கட்டுமே!
_________________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக