வியாழன், 18 செப்டம்பர், 2025

"..சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.."

 

"..சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.."

__________________________________________


பெருந்தீனி என்பது

அறிவுக்குத் தான்.

கடல் போல அறிவு

கவளம் கவளமாய்

முழுதும்

உண்ணப்பட வேண்டும்.

மூளைச்சுரப்பு

வயிற்றுச்சுரப்பால்

கொஞ்சம்

தடைப்படும்போது

சிறு உண்டி போதும்.

மனிதன் 

வாழ்வதற்கு 

அதன் மூலம் சிந்திப்பதற்கு

சாப்பிட வேண்டும்.

சாப்பிட மட்டுமா

வாழ்க்கை?

வள்ளுவரின் கூர்மையான‌

சொற்கள் அவை.

அறியாமையின்

மரண ஆழத்தில் 

கிடப்பவனுக்கு

உயிர்ப்பிக்க 

முதலில்

உயிர்த்துக்கொள்ளும்

ஓர்மை வேண்டும்.

சிந்தனையை

வழி மறித்துக்கொண்டு

கிடக்கும்

கடவுள்களால்

என்ன எய்துவது?

சிந்தனையே உணவு.

அறிவே புசிக்கப்படுவது.

மனிதனின் வரலாறு

அப்போது தான்

தன் வழியை திறந்து

வைத்துக்கொள்கிறது.

_______________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக