ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

அகழ்நானூறு 103

 


அகழ்நானூறு 103

______________________________


பாசிலை தோய் தரூஉ படர் வெங்கழியிடை

குருகு குளித்து கெண்டை இரை கொளீஇ

அண்ணிய ஞாழல் நெடுஞ்சினை மூசும்

பூஞ்சிறைத் தும்பி துள்ளிய கயலின்

துடி துடி உடுக்கை அன்ன காட்சியில்

அவனும் துடித்தான் அவள் விழி என்ன‌

உள்ளி உள்ளி உள்தொறும் ஒடுங்கி.

கல்லென வெள்ளென சுள்ளென் றோரொலி

தூண்டில் எறிய புறத்துப் பாலொரு

புரிவளை இறையள் கொடுவிழை காட்டி

புல்லிய முறுவலில் எனை அள்ளியது என்னே.


_____________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக