கவிஞர் பெருமகனார்
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே
______________________________________
(கவிஞர் விக்கிரமாதித்தன் அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்து மடல்)
கவிதை சுரப்பது
எங்கே?
பாணதீர்த்தமா?
கல்யாணி தீர்த்தமா?
பொதிகை மலையிடுக்குகளே
அவர் மன இடுக்குகள்.
அருவி அலப்பறையில்
ஓரத்தே
ஏதோ "ஓங்காரம்" கேட்டிருப்பார்.
"கல் பொரு சிறுநுரைகளில்"
உடைந்த
முத்தச்சிதிலங்களில்
மூண்ட நெருப்பிடையே
தமிழ்க்கவிதைச் சிலம்புகளும்
கேட்டிருப்பார்.
அவர் அகத்தே குடியிருக்கும்
அகத்தியன் சிரிப்புகளே
அங்கு அகத்தியர் அருவியாய்
நீர் விழுது ஊஞ்சல்களின்
மணித்துளிகளாய்
தெறித்து விழும்.
ப்தினெட்டின்
மேல் கணக்கா? கீழ் கணக்கா?
அவர் இலக்கியம் எது என்று
"கணக்குக் கேட்டால்"
அகமும் புறமும்
உள்ளே
அருவிச்சத்தமின்றி
வேறு ஓசை இல்லை என்பார்.
கவிஞர் பெருமகனே
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!
பொன் சுடரும் அந்த
பொருனைத்துளியினும்
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!
________________________________________________
சொற்கீரன்
(இ பரமசிவன்)
மணித்துளிகளில்
கவிஞர் பெருமகனார்
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே
______________________________________
(கவிஞர் விக்கிரமாதித்தன் அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்து மடல்)
கவிதை சுரப்பது
எங்கே?
பாணதீர்த்தமா?
கல்யாணி தீர்த்தமா?
பொதிகை மலையிடுக்குகளே
அவர் மன இடுக்குகள்.
அருவி அலப்பறையில்
ஓரத்தே
ஏதோ "ஓங்காரம்" கேட்டிருப்பார்.
"கல் பொரு சிறுநுரைகளில்"
உடைந்த
முத்தச்சிதிலங்களில்
மூண்ட நெருப்பிடையே
தமிழ்க்கவிதைச் சிலம்புகளும்
கேட்டிருப்பார்.
அவர் அகத்தே குடியிருக்கும்
அகத்தியன் சிரிப்புகளே
அங்கு அகத்தியர் அருவியாய்
நீர் விழுது ஊஞ்சல்களின்
மணித்துளிகளாய்
தெறித்து விழும்.
ப்தினெட்டின்
மேல் கணக்கா? கீழ் கணக்கா?
அவர் இலக்கியம் எது என்று
"கணக்குக் கேட்டால்"
அகமும் புறமும்
உள்ளே
அருவிச்சத்தமின்றி
வேறு ஓசை இல்லை என்பார்.
கவிஞர் பெருமகனே
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!
பொன் சுடரும் அந்த
பொருனைத்துளியினும்
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!
________________________________________________
சொற்கீரன்
(இ பரமசிவன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக