செவ்வாய், 23 செப்டம்பர், 2025

அந்த மரத்தடியில்

 நான் ஒரு ஏ ஐ விஞ்ஞானி

___________________________________

சொற்கீரன்


நான் 

கொஞ்சம் இறங்கி

ரோட்டோரம்

அந்த மரக்கிளையில்

என் ஹெல்மெட்டை மாட்டி விட்டு

சிறு அவதியை 

சரி செய்து விட்டு

மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்து

ஹெல்மெட்டை மறந்து

கிளம்பி விட்டேன்.

அப்புறம் ஞாபகம் வந்து

அங்கு மீண்டும் வந்து

அதை எடுக்க முனைந்தேன்.

அது பிசுக் பிசுக்கு என்று

மரக்கிளையோடு ஒட்டிக்கொண்டு

வர மறுத்தது.

என்ன இது..

திடுக்கிட்டேன்.

மரத்திலிருந்து உதிர்ந்து கிடந்தன அவை.

இலைகள் இல்லை அவை.

பூச்சருகுகள் இல்லை அவை.

ஒடிந்த குச்சிகள் இல்லை அவை.

அவை யாவும்

எழுத்துக்கள்.

எழுத்துகளால் ஆன கட்டுரைகள்.

கட்டுரைகளாம் ஆன விஞ்ஞாங்கள்.

இன்னும் 

சிறுமூளை பெருமூளை படங்களுடன்

ஆராய்ச்சிக்கட்டுரைக் காகிதங்கள்.

ஆம்.

நான் ஒரு ஏ ஐ ஆராய்ச்சி விஞ்ஞானி.

மிச்சத்தை

அந்த "ஹெல்மெட்டிடமே"

கேட்டுக்கொள்ளுங்கள்.


_____________________________________________

இந்த கற்பனையும் சேர்ந்து தான்

அந்த மரத்தடியில்

குவிந்து கிடக்கின்றன.

___________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக